உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜம்மு - காஷ்மீரில் அதிரடி பயங்கரவாதி சுட்டுக்கொலை

ஜம்மு - காஷ்மீரில் அதிரடி பயங்கரவாதி சுட்டுக்கொலை

ஸ்ரீநகர், ஜம்மு - காஷ்மீரில், சமீபத்தில் அடுத்தடுத்து பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறின. இதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு உயரதிகாரிகளுடன் நேற்று முன்தினம் உயர்மட்ட ஆலோசனை நடத்தினார். இதையொட்டி, அங்கு பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டது.இதற்கிடையே, பந்தி போரா மாவட்டத்தின் அராகாம் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியில் ராணுவ வீரர்களுடன் இணைந்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.அப்போது, ஒரு வீட்டில் பதுங்கியிருந்த பயங்கரவாதி, பாதுகாப்பு படையினரை நோக்கி சுடத் துவங்கினார். இதையடுத்து, நம் வீரர்கள் நடத்திய பதிலடி தாக்குதலில், அந்த பயங்கரவாதியை சுட்டுக் கொன்றதுடன், அவர் பதுக்கி வைத்திருந்த கைத்துப்பாக்கி, கையெறி குண்டுகள் போன்ற ஏராளமான ஆயுதங்களையும் பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர்.சுட்டுக்கொல்லப்பட்ட நபரைப் பற்றிய அடையாளம் காணும் பணி நடைபெற்று வருவதாக பாதுகாப்பு படை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை