தங்கவயல் தாலுகா செஸ்: 5 மாணவியர் வெற்றி
தங்கவயல்:தங்கவயல் தாலுகா அளவிலான செஸ் போட்டியில் ஐந்து மாணவியர் வெற்றி பெற்றனர். இவர்கள் மாவட்ட அளவில் விளையாடுவர்.ராபர்ட்சன்பேட்டை அரசு ஆண்கள் உயர் நிலைப்பள்ளியில் 17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான, தாலுகா அளவிலான 'செஸ்' போட்டி நடந்தது. இதில், தங்கவயலில் உள்ள 20 உயர்நிலை பள்ளிகளின் மாணவர் -- மாணவியர் 100 பேர் பங்கேற்றனர். நான்கு சுற்று போட்டிகள் நடந்தன. இறுதி சுற்றில் விளையாடிய 10 பேரில் செயின்ட் தெரசா உயர் நிலைப்பள்ளி 8ம் வகுப்பு மாணவியர் ரிஷா கத்திஜா, ஜுனேதா அம்பர்; 10ம் வகுப்பு மாணவியர் கவுதமி, கீர்த்தி; பெமல் உயர் நிலைப்பள்ளி 10ம் வகுப்பு மாணவி ஸ்ரீகோடா ஆகிய ஐந்து பேர் வெற்றி பெற்றனர். இவர்களுக்கு பரிசு பதக்கமும், சான்றிதழும் வழங்கப்பட்டன.இவர்கள், மாவட்ட அளவில் நடத்தப்படும் செஸ் போட்டியில் விளையாடுவர் என அறிவிக்கப்பட்டது. இதில், மாணவர்கள் யாரும் வெற்றி பெறவில்லை.தாலுகா அளவிலான செஸ் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவியர். இடம்: ராபர்ட்சன்பேட்டை.