மேலும் செய்திகள்
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
5 hour(s) ago | 5
மேற்குவங்கத்தில் சோகம்: நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலி
6 hour(s) ago | 1
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
8 hour(s) ago | 13
தங்கவயல் : தங்கவயலில் திருவள்ளுவர் சிலை நிறுவி, 38ம் ஆண்டு விழா நாளை நடக்கிறது.தங்கவயல் தமிழ்ச்சங்கத் தலைவர் கலையரசன் அளித்த பேட்டி:தங்கவயல் தமிழ்ச்சங்கம், பல்வேறு கலை இலக்கிய, நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இதில் கர்நாடக தமிழர் மாநாடு, பொங்கல் அன்று தமிழர் ஊர்வலம் ஆகியவை வரலாறு பேசும்படி அமைந்தது.தங்கவயல் உரிகம் அம்பேத்கர் சாலையில், திருவள்ளுவர் சிலை அமைக்க, தங்கச்சுரங்க நிறுவனத்தில் ஐ.என்.டி.யு.சி., சங்கம் அங்கீகரிக்கப்பட்ட சங்கமாக இருந்தபோது, அதன் பொதுச்செயலர் சுந்தர மூர்த்தியின் முயற்சியில், நிறுவன துணைப் பொது மேலாளர் ஜெயராமன், நகர வளர்ச்சித் துறை பொறியாளர் வின்சென்ட் ஆபிரகாம் ஆய்வு செய்து இவ்விடத்தை அளித்தனர்.இங்கு 1986 ஜூன் 6ல் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டது. அனைத்து கட்சித் தலைவர்கள், தமிழறிஞர்கள், பிரமுகர்கள் பங்கேற்றனர். இது தான், கர்நாடகாவில் நிறுவப்பட்ட முதல் திருவள்ளுவர் சிலை.இந்நாளில் ஆண்டுதோறும் சிலைக்கு மாலை அணிவித்தல், திருக்குறள் ஓதுதல், தமிழ் ஆர்வலர்களுக்கு விருதுகள் வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடத்துவது வழக்கம்.அதே போல், இவ்வாண்டின் நிகழ்ச்சியும் நாளை நடக்கிறது.சிமென்ட் சிலையாக உள்ளதை வெண்கலச் சிலையாக மாற்றவும், தமிழ்ச்சங்க அரங்கம் கட்டுவதற்கான ஆலோசனையும்நடந்து வருகிறது.தாய் மொழி பற்றை வளர்ப்பது, தமிழ் ஆர்வலர்களை ஊக்கப்படுத்துவது, தமிழை படிக்க வைப்பது, தமிழை அழிக்க விடாமல் பாதுகாக்க தமிழ் இளைஞர்களை உற்சாகப்படுத்துவது என பல்வேறு தமிழ் நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
5 hour(s) ago | 5
6 hour(s) ago | 1
8 hour(s) ago | 13