உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தற்கொலை செய்த பெண் உடல்  கணவர் வீட்டின் முன் அடக்கம்

தற்கொலை செய்த பெண் உடல்  கணவர் வீட்டின் முன் அடக்கம்

கோலார் : வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட புதுபெண்ணின் உடல், கணவர் வீட்டின் முன் அடக்கம் செய்யப்பட்டது.கோலார் அருகே வசித்தவர் மானசா, 24. இவருக்கும், துரண்டஹள்ளி கிராமத்தின் உல்லாஸ், 26 என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. கூடுதல் வரதட்சணை கேட்டு மானசாவை, கணவரும், அவரது குடும்பத்தினரும் கொடுமைப்படுத்தினர். ஊர் பெரியவர்கள் பஞ்சாயத்து நடத்தியும் பலன் இல்லை.மானசா, பெற்றோர் வீட்டில் வசித்தார். விவாகரத்து கேட்டு, அவருக்கு கணவர் நோட்டீஸ் அனுப்பினார். மனம் உடைந்த மானசா 24ம் தேதி இரவு வீட்டில் துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.மானசாவின் பெற்றோர் அளித்த புகாரில் உல்லாஸ், அவரது பெற்றோர் மீது கோலார் ரூரல் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். அவர்கள் தலைமறைவாகி விட்டனர். நேற்று முன்தினம் மாலையில், பிரேத பரிசோதனை செய்யப்பட்ட மானசா உடல், குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. உல்லாஸ் வீட்டிற்கு எடுத்து சென்றனர். அவரது வீட்டின் அருகே குழிதோண்டி உடலை அடக்கம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை