உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆடிக்கொண்டே சரிந்து விழுந்து உயிரை விட்ட மணமகள்: திருமண விழாவில் சோகம்

ஆடிக்கொண்டே சரிந்து விழுந்து உயிரை விட்ட மணமகள்: திருமண விழாவில் சோகம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டேராடூன்: உத்தரகண்டில் திருமண விழாவின் போது மணமகள் ஸ்ரேயா சந்தோஷத்தில் நடனம் ஆடிய போது மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. உத்தரகண்ட் மாநிலம் நைனிடாலில் திருமண விழாவில் மணமகள் ஸ்ரேயா (வயது 28) சந்தோஷத்தில் நடனம் ஆடியுள்ளார். அப்போது திடீரென மயங்கி விழுந்தார். மணமகளை மருத்துவமனைக்கு உறவினர்கள் அழைத்து சென்றனர். ஸ்ரேயா உயிரிழந்து விட்டதாக டாக்டர் கூறியதும், மணமகன் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதயம் மற்றும் நுரையீரல் பிரச்னைகளால் உயிரிழந்திருக்கலாம் என டாக்டர்கள் தகவல் தெரிவித்துள்ளார். மணமகள் ஸ்ரேயா டில்லியை சேர்ந்தவர். மணமகனும் அவரது குடும்பத்தினரும் லக்னோவைச் சேர்ந்தவர்கள்.ஸ்ரேயாவின் தந்தை கூறியதாவது: என் மகள் எம்.பி.ஏ., படித்துள்ளார். மணமகன் லக்னோவில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் வேலை செய்கிறார். திருமண விழாவில் மகள் நடனம் ஆடி கொண்டு இருந்தார். அப்போது சரிந்து விழுந்து உயிரிழந்தார். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

theruvasagan
ஜூன் 18, 2024 22:18

இப்போதெல்லாம் திருமண கொண்டாட்டங்களில் நமது பாரம்பரிய வழக்கங்களை ஒதுக்கித் தள்ளிவிட்டு ஒலிபெருக்கிகளை அலற விட்டு குத்துப்பாட்டுக்கு கண்டபடி டான்ஸ் ஆடுவது என்கிற கலாசார சீரழிவின் கெடுதலான பக்க விளைவுகள் நம்மை எங்கே கொண்டு போய் தள்ளும் என்பதற்கு இது போன்ற துயர சம்பவங்கள் ஒரு எடுத்துக்காட்டு.


Ganesh
ஜூன் 18, 2024 20:10

Hope most probably due to more stress heart attack might have happened....IT industry normally have mental stress as well as there is no physical work compared with other core engineering works ie.Civil, Mechanical, Electrical engineering ...So in future we may expect quite natural of unusual deaths in our country


aaruthirumalai
ஜூன் 18, 2024 20:08

பாவம் அந்த பெண் காரணம் என்ன என்று தெரியல.


P. SRINIVASALU
ஜூன் 19, 2024 09:58

கோவிடுக்கு போட்ட தடுப்பூசிதான்


தாமரை மலர்கிறது
ஜூன் 18, 2024 18:51

மாரடைப்பாக இருக்கலாம். உடல் பருமனை குறைப்பது நல்லது. அதற்கு உடல் உழைப்பு அவசியம். வியர்வை வெளியே வராவிடில், உயிர் வெளியே போய்விடும்.


rsudarsan lic
ஜூன் 18, 2024 18:39

தண்ணி எவ்வளவு உள்ளே இருந்தது?


Sudhakar
ஜூன் 18, 2024 18:31

Over ஆ ஆட்டம் போட்டால், சாவு தான். ????


rama adhavan
ஜூன் 19, 2024 01:49

சாவு ஊர்வலத்தில் எவ்வளவு பேர் தண்ணீ போட்டுவிட்டு ஆட்டம் போடுகின்றனர். ...


மேலும் செய்திகள்