உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பஸ்சில் இருந்து கழன்ற டயர் ஓடிச்சென்று பிடித்த நடத்துனர்

பஸ்சில் இருந்து கழன்ற டயர் ஓடிச்சென்று பிடித்த நடத்துனர்

உடுப்பி: குந்தாபூருக்கு சென்று கொண்டிருந்த அரசு பஸ்சின் ஒரு டயர் மட்டும் கழன்று சென்றது. அதிர்ஷ்டவசமாக பயணியர் உயிர் தப்பினர்.உடுப்பி நகரில் இருந்து குந்தாபூருக்கு நேற்று முன்தினம் காலை, 40 பயணியருடன் கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ் சென்று கொண்டிருந்தது.குந்தாபூர் அஜ்ரி அருகே செல்லும் போது, பஸ்சின் இடது பக்கத்தின் டயர் ஒன்று திடீரென கழன்றது. இதனால் பஸ் ஒரு பக்கமாக சாய்ந்து நின்றது. கழன்று ஓடிய டயரை, பஸ் நடத்துனரும், பயணியரும் விரட்டி சென்று பிடித்து, மேலே கொண்டு வந்து, மீண்டும் பஸ்சில் இணைத்தனர்.பஸ் மெதுவாக சென்றதால், விபத்து நடக்காமல் அதிர்ஷ்டவசமாக பயணியர் உயிர் தப்பினர்.'அலட்சியமாக செயல்பட்ட, டிப்போ மெக்கானிக் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று பயணியர் கூறினர்.பஸ்சில் இருந்து கழன்று சென்ற டயரை மீண்டும் உருட்டி வந்த பஸ் ஓட்டுனர் மற்றும் பயணி. இடம்: குந்தாபூர், உடுப்பி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

panneer selvam
ஜூலை 22, 2024 18:24

the problem is free travel to ladies all buses except express one so no revenue . Causality is maintenance


N.Purushothaman
ஜூலை 22, 2024 14:05

இது கன்னட திராவிட மாடல் .....


நிக்கோல்தாம்சன்
ஜூலை 22, 2024 13:20

காங்கிரஸ் ரெட்டியின் தலைமையில் கருநாடக போக்குவரத்து வந்தபின்னர் தினம் இரண்டு பேரூந்துகளாவது ஹசன் 2 பெங்களூரு வழித்தடத்தில் ரிப்பேர் ஆகி நிற்பதை பார்க்கிறேன் ,


P.Chandrasekaran
ஜூலை 22, 2024 12:33

கர்நாடகாவிலுமா?


மேலும் செய்திகள்