உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / செக்யூரிட்டி ஏஜென்சிகளுக்கு அளித்த அனுமதியை ரத்து செய்தது மாநகராட்சி

செக்யூரிட்டி ஏஜென்சிகளுக்கு அளித்த அனுமதியை ரத்து செய்தது மாநகராட்சி

பெங்களூரு: தன் கட்டுப்பாட்டில் இருக்கும் பள்ளிகளுக்கு ஆசிரியர்களை நியமிக்க, செக்யூரிட்டி ஏஜென்சிகளுக்கு அளிக்கப்பட்டிருந்த அனுமதியை பெங்களூரு மாநகராட்சி ரத்து செய்துள்ளது.தன் கட்டுப்பாட்டில் இருக்கும் நர்சரி, தொடக்க, உயர்நிலைப் பள்ளிகள், பி.யு.சி., கல்லுாரிகள், பட்டப்படிப்பு கல்லுாரிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில், ஆசிரியர்களை நியமிக்க பெங்களூரு மாநகராட்சி விரும்பியது.இதற்கான பொறுப்பை தனியார் செக்யூரிட்டி ஏஜென்சிகளிடம் மாநகராட்சி ஒப்படைத்திருந்தது. இது கடும் சர்ச்சையை கிளப்பியது. இவற்றை பொருட்படுத்தாத மாநகராட்சி, 2024 - 24ம் கல்வியாண்டுக்கு ஆசிரியர்களை நியமிக்கும்படி, செக்யூரிட்டி ஏஜென்சிகளுக்கு மாநகராட்சி உத்தரவிட்டது. இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவு கடிதமும் கொடுத்தது.அடுக்குமாடி குடியிருப்புகள், வீடுகள், நிறுவனங்களுக்கு செக்யூரிட்டிகளை நியமிக்கும் ஏஜென்சிகளிடம், ஆசிரியர்களை தேர்வு செய்யும் பொறுப்பை அளித்தது சரியல்ல என, கல்வி வல்லுனர்கள் ஆட்சேபம் தெரிவித்தனர்.பா.ஜ., முன்னாள் அமைச்சர் சுரேஷ்குமார், காங்கிரஸ் எம்.எல்.சி., புட்டண்ணா உட்பட பலரும் கண்டித்தனர். உத்தரவைதிரும்பப் பெறாவிட்டால், போராட்டம் நடத்துவதாகவும் எச்சரித்தனர்.இதன்பின் இந்த விவகாரத்தில் மாநில அரசு தலையிட்டது. உத்தரவை திரும்பப் பெறும்படி மாநகராட்சிக்கு அரசு உத்தரவிட்டது. இதை ஏற்று ஆசிரியர்களை நியமிக்க, செக்யூரிட்டி ஏஜென்சிகளுக்கு அளித்திருந்த உத்தரவை, மாநகராட்சி நேற்று முன்தினம் ரத்து செய்தது.தற்போது, பெங்களூரு மாநகராட்சி பள்ளி, கல்லுாரிகளில் கல்வி தரத்தை அதிகரிக்கும் நோக்கில், ஆசிரியர்கள், பேராசிரியர்களை பள்ளி வளர்ச்சி மற்றும் மேற்பார்வை கமிட்டி, கல்லுாரி வளர்ச்சி ஆணையம் மூலமாக நியமிக்க, மாநகராட்சி முடிவு செய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை