மேலும் செய்திகள்
வினாயகர் சதுர்த்தி வெகுவிமரிசை
08-Sep-2024
கோவிந்தராஜ்நகர்: விநாயகர் சிலைக்கு அணிந்திருந்த 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கச்செயினுடன் சேர்த்து சிலையை தம்பதி கரைத்தனர். 10 மணி நேர தேடுதலுக்கு பின், நகை மீட்கப்பட்டது.பெங்களூரு கோவிந்தராஜ் நகரில் வசிப்பவர் ராமய்யா. இவரது மனைவி உமாதேவி. இருவரும் ஆசிரியர்கள். விநாயகர் சதுர்த்தியை ஒட்டி தங்கள் வீட்டில், விநாயகர் சிலை வைத்து வழிபட்டனர்.சிலைக்கு 60 கிராம் எடையுள்ள தங்கச்செயின் அணிவித்திருந்தனர். இதன் இன்றைய மதிப்பு 4 லட்சம் ரூபாய்.நேற்று முன்தினம் வீட்டின் முன் வந்த, மாநகராட்சியின் சிலை கரைப்பு லாரியில் கரைத்தனர். அப்போது சிலைக்கு அணிவித்திருந்த தங்கச்செயினை எடுக்க மறந்து விட்டனர். வீட்டிற்கு சென்றதும் நினைவுக்கு வந்தது.சிலை கரைக்கப்பட்ட லாரியை கண்டுபிடித்தனர். ஊழியர்களிடம் கூறினர். அவர்கள் தேடி பார்த்த போது, தங்கச்செயின் கிடைக்கவில்லை. இதுகுறித்து மாகடி ரோடு போலீஸ் நிலையத்தில் தம்பதி புகார் செய்தனர்.கோவிந்தராஜ் நகர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., பிரியா கிருஷ்ணா கவனத்திற்கும் கொண்டு சென்றனர். சிலை கரைப்பு லாரியை ஒப்பந்தம் எடுத்து இருந்த கான்ட்ராக்டருக்கும் தகவல் கிடைத்தது. பின், லாரியில் தங்கச்செயினை தேடும் பணி நடந்தது.இதற்காக 10,000 லிட்டர் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. பத்து மணி நேர தேடுதலுக்கு பின், தங்கச்செயின் கிடைத்தது. இந்த லாரியில் மட்டும் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
08-Sep-2024