உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குமாரசாமியிடம் உதவி கேட்ட குடும்பத்தினர்

குமாரசாமியிடம் உதவி கேட்ட குடும்பத்தினர்

ஹாவேரி,: விபத்தில் காயம் அடைந்த மகனின் சிகிச்சைக்கு உதவும்படி, மத்திய அமைச்சர் குமாரசாமியிடம் வேண்டுகோள் விடுத்தனர்.மத்திய கனரக தொழிற்துறை அமைச்சர் குமாரசாமி, நேற்று ஹாவேரி மாவட்டம், ராணி பென்னுாருக்கு வருகை தந்திருந்தார். அப்போது இவரை சந்தித்த குடும்பத்தினர், தங்கள் மகனின் சிகிச்சைக்கு உதவும்படி கேட்டனர்.ஹாவேரியின், சங்கூர் கிராமத்தை சேர்ந்த ஜெகதீஷ் சஜ்ஜனர், 30, விபத்தில் காயமடைந்து படுத்த படுக்கையானார். இவருக்கு சிகிச்சை அளிக்க பணம் இல்லை. இவரது குடும்பத்தினர், மத்திய அமைச்ச் குமாரசாமியை சந்தித்து, பிரச்னையை விவரித்தனர்.அவர்களை சமாதானம் செய்த குமாரசாமி, ''இங்கு எதையும் செய்ய முடியாது. பெங்களூருக்கு வாருங்கள். தனிப்பட்ட முறையில் உதவி செய்கிறேன்,'' என கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ