உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / துப்பாக்கி வெடித்து ஏட்டு கவலைக்கிடம்

துப்பாக்கி வெடித்து ஏட்டு கவலைக்கிடம்

புதுடில்லி:பஹர்கஞ்ச் போலீஸ் ஸ்டேஷனில், துப்பாக்கியால் சுட்டுக் கொண்ட தலைமை போலீஸ்காரருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.ஹரியானா மாநிலம் ரேவாரியைச் சேர்ந்தவர் சுரேந்திரா. டில்லி மாநகரப் போலீசின் பஹர்கஞ்ச் ஸ்டேஷனில் தலைமைப் போலீஸ்காரர்.நேற்று மதியம் 2:00 மணிக்கு, ஸ்டேஷனில் இருந்த துப்பாக்கி வெடித்து சுரேந்திராவுக்கு தலையில் காயம் ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதேநேரத்தில், அவரது நிலை கவலைகிடமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.இந்த சம்பவம் குறித்து ஹரியானா மாநிலம் ரேவாரியில் வசிக்கும் சுரேந்திராவின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி