மேலும் செய்திகள்
மூன்று பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்வு
13-Feb-2025
புதிய நகராட்சிகளில் கட்டட அனுமதி கட்டணம் மாற்றம்
14-Feb-2025
மாநகராட்சிகளில் அடிப்படை வளர்ச்சி பணிகள் மேற்கொள்வதற்காக, 'மகாத்மா காந்தி நகர வளர்ச்சி 2.0' திட்டத்துக்கு, 2,000 கோடி ரூபாய் அறிவிக்கப்படுகிறது. நடப்பு ஆண்டிற்கு, 600 கோடி ரூபாய் ஒதுக்கீடு ராய்ச்சூர், பீதர், ஹாசன் நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படுகிறது. புதிதாக தார்வாட் மாநகராட்சி உருவாக்கப்படுகிறது 'நகரோத்தனா' திட்டம் 4ன் கீழ், வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள 2025 - 26ம் ஆண்டிற்கு, 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு நகர உள்ளாட்சி அமைப்புகளில் பல்வேறு கட்டணங்கள், வரி வசூல் செய்வது, இனி ஆன்லைன் மூலம் பெறப்படும் அனைத்து மாநகராட்சிகள், மாவட்ட நகர வளர்ச்சி பிரிவுகள், உள்ளாட்சி அமைப்புகளில், அலுவலக பணிகளை கணினிமயமாக்குவது கட்டாயமாக்கப்படும் கர்நாடக நகர நீர் வினியோகம் மற்றும் வடிகால் வாரியம் சார்பில், ராம்நகர், உல்லால் பகுதிகளுக்கு, 705 கோடி ரூபாய் செலவில், குடிநீர் திட்டம் அமல்படுத்தப்படும். 'அம்ருத் - 2.0' திட்டத்தின் கீழ், 233 குடிநீர் திட்டங்கள் மேற்கொள்ளப்படும். இத்துடன், 142 கோடி ரூபாய் செலவில், ஷிகாரிபுரா, சாகர், ஐனாபுரா, எம்.கே.ஹுப்பள்ளி, குடச்சி, பைலஹொங்கல், சஹாபுரா, ஸ்ரீரங்கப்பட்டணா ஆகிய நகரங்களில், வடிகால் வசதி செய்யப்படும் கட்டட வடிவமைப்பு மற்றும் திட்டங்களுக்கு, ஆன்லைன் மூலம் அனுமதி வழங்கும் வகையில், 'ஒருங்கிணைந்த நில மேலாண்மை அமைப்பு' என்ற புதிய தொழில்நுட்பம் நடைமுறைப்படுத்தப்படும். இது தொடர்பான ஹார்டுவேர் தரம் உயர்த்தப்படுவதற்கு தேவையான நிதி வழங்கப்படும்.
13-Feb-2025
14-Feb-2025