உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கங்கை, யமுனை, கிருஷ்ணா ஆறுகளாக பாய்ந்த மும்மூர்த்திகள் கங்கை, யமுனை, கிருஷ்ணா ஆறுகளாக பாய்ந்த

கங்கை, யமுனை, கிருஷ்ணா ஆறுகளாக பாய்ந்த மும்மூர்த்திகள் கங்கை, யமுனை, கிருஷ்ணா ஆறுகளாக பாய்ந்த

கர்நாடகாவின் மிக நீளமான ஆறு என்ற பெருமை பெற்றது கிருஷ்ணா. இந்த ஆற்றுக்கு ஆன்மிக ரீதியான தொடர்பு உள்ளதாக புராணங்கள் கூறுகின்றன.மஹாராஷ்டிரா மாநிலத்தின் மஹாபலேஸ்வராவில் கிருஷ்ணா பிறப்பெடுக்கிறது. கர்நாடகா, ஆந்திரா என, பல்வேறு மாநிலங்கள் வழியாக சென்று, வங்கக்கடலில் கலக்கிறது. ஆற்றுக்கு கிருஷ்ணா என, பெயர் சூட்ட காரணம் என்ன என்பது, பலருக்கும் தெரியாது.

பால்ய நாட்கள்

ஸ்ரீ கிருஷ்ணர், கோவர்த்தன மலையை ஒற்றை விரலால் துாக்கி, யாதவர்களை காப்பாற்றி பெரும் அதிசயத்தை நிகழ்த்தினார். பகாசுரனை தோற்கடித்தது, இதே ஆற்றங்கரையில் என்பது, பக்தர்களின் நம்பிக்கை.அது மட்டுமின்றி இந்த ஆற்றங்கரையிலேயே கிருஷ்ணன், தன் பால்ய நாட்களை கழித்ததாக ஐதீகம். எனவே ஆற்றுக்கு கிருஷ்ணா என, பெயர் ஏற்பட்டது.சரஸ்வதியின் சாபத்துக்கு ஆளான, பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகள் கங்கை, யமுனை, கிருஷ்ணா என்ற ஆறுகளாக பாய்ந்ததாக புராணங்கள் கூறுகின்றன.ஷாதவாஹனா, விஜயநகர் உட்பட பல அரச குடும்பத்தினர் கிருஷ்ணா ஆற்றை நம்பியிருந்தனர். இந்த ஆற்றில் நீராடினால் பாவங்கள் விலகி, மோட்சம் கிடைக்கும் என, பக்தர்கள் நம்புகின்றனர்.இன்றைக்கும் விவசாயம், தொழிற்சாலை பணிகளுக்கும், குடிநீருக்கும் லட்சக்கணக்கான மக்கள், கிருஷ்ணா ஆற்றை நம்பியுள்ளனர்.இந்தியாவின் நான்காவது மிக நீளமான ஆறு. கர்நாடகாவில் 480 கி.மீ., தொலைவு பாய்கிறது. அரபிக்கடல் 60 கி.மீ., தொலைவில் இருந்தாலும், வடக்கு முகமாக 1,400 கி.மீ., துாரம் ஓடி, வங்கக்கடலில் கலக்கிறது.

துணை ஆறுகள்

துங்கபத்ரா, கட்டபிரபா, மல்லபிரபா, பீமா, கொய்னா, இந்திராணி, துாத் கங்கா, வேத கங்கா, பஞ்சகங்கா, முஷி, தின்டி அக்ரனி உள்ளிட்ட ஆறுகள், கிருஷ்ணாவின் துணை ஆறுகள் என்பது குறிப்பிடத்தக்கது.கர்நாடகாவின் அலமாட்டி அணை, கிருஷ்ணா ஆற்றின் முக்கியமான அங்கமாகும். இங்கு மல்லபிரபா ஆறு, கிருஷ்ணாவுடன் இணைகிறது. இவ்வளவு சிறப்புகள் கொண்ட கிருஷ்ணா ஆறு, ஆன்மிகத்துடன் தொடர்பு கொண்டு, பக்தர்களை ஈர்க்கிறது - நமது நிருபர் -.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி