மேலும் செய்திகள்
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
5 hour(s) ago | 5
மேற்குவங்கத்தில் சோகம்: நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலி
5 hour(s) ago | 1
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
8 hour(s) ago | 13
குடகு : திருமண வரவேற்பு விருந்தில், 'ஸ்வீட்' இல்லை என்று கூறியதால் ஏற்பட்ட பிரச்னையில், திருமணம் நின்று போனது.குடகு, சோமவார்பேட்டில் வசிப்பவர் மஞ்சுநாத். ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவரது மகள் கிருத்திகா, 23. இவருக்கும் துமகூரின் ஹர்ஷித், 25 என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன், திருமண நிச்சயம் நடந்தது. சோமவார்பேட்டில் உள்ள திருமண மண்டபத்தில், நேற்று திருமணம் நடக்க இருந்தது. நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு, திருமண வரவேற்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சமாதானம்
ஹர்ஷித் குடும்பத்தினர், உறவினர்கள் மாலை 5:30 மணிக்கு, திருமண மண்டபம் வந்தனர். தங்களை சரியாக வரவேற்கவில்லை என்று, ஹர்ஷித் உறவினர்கள் சிலர், மஞ்சுநாத் உறவினர்கள் மீது, குற்றச்சாட்டு கூறினர்.கோபித்து கொண்டு திருமண மண்டபத்தில் இருந்து, அறைக்கு சென்று விட்டனர். மஞ்சுநாத்தும், அவரது உறவினர்களும், ஹர்ஷித், அவரது குடும்பத்தினரை சமாதானப்படுத்தி அழைத்து வந்தனர்.இதனால் 7:00 மணிக்கு நடக்க இருந்த, திருமண வரவேற்பு நள்ளிரவில் 12:30 மணிக்கு நடந்தது. ஹர்ஷித், கிருத்திகா மோதிரம் மாற்றி கொண்டனர். அதன் பின்னர் திருமண வரவேற்பு விருந்து நடந்தது. பரிமாறப்பட்ட உணவில் 'ஸ்வீட்' இல்லை என்று கூறி, ஹர்ஷித் உறவினர்கள் மீண்டும், தகராறு செய்தனர். வரதட்சணை புகார்
இதனால் ஏற்பட்ட பிரச்னை, நேற்று காலை வரை நீடித்தது. கோபம் அடைந்த ஹர்ஷித், தான் அணிவித்த மோதிரத்தை கழற்றும்படி கிருத்திகாவிடம் கூறினார். ஒரு நிமிடம் கூட யோசிக்காத கிருத்திகா, மோதிரத்தை கழற்றி வீசினார்.இதையடுத்து திருமணம் நின்று போனது. கூடுதல் வரதட்சணை தர மறுத்ததால், பிரச்னை செய்து வேண்டும் என்றே திருமணத்தை நிறுத்தியதாக, ஹர்ஷித், அவரது பெற்றோர் மீது, சோமவார்பேட் போலீசில், மஞ்சுநாத் புகார் அளித்தார். விசாரணை நடக்கிறது.
5 hour(s) ago | 5
5 hour(s) ago | 1
8 hour(s) ago | 13