உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மணிக்கணக்கில் காக்க வைத்தனர் அங்குமிங்கும் அலையவிட்டனர்... புகார் சொன்னது யார் தெரியுமா?

மணிக்கணக்கில் காக்க வைத்தனர் அங்குமிங்கும் அலையவிட்டனர்... புகார் சொன்னது யார் தெரியுமா?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: தமிழகத்தில் மணல் குவாரிகளில், அனுமதி அளித்த அளவை விட அதிகமாக மணல் எடுத்தது தொடர்பாக நடந்த பணமோசடி குறித்து, அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இந்த வழக்கில், தமிழகத்தின் ஐந்து மாவட்ட கலெக்டர்களிடம் விசாரிக்க அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஆனால், அவர்கள் ஆஜராகாமல் இருந்தனர்.இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கலெக்டர்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது. விசாரணைக்கு ஆஜராகும்படியும் உத்தரவிட்டது.இந்நிலையில் இந்த வழக்கு, நீதிபதிகள் பீலா திரிவேதி, பங்கஜ் மிட்டல் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் வாதிட்டதாவது:உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, தமிழகத்தின் வேலுார், திருச்சி, கரூர், தஞ்சாவூர் மற்றும் அரிய லுார் ஆகிய மாவட்டங்களின் கலெக்டர்கள், அமலாக்கத் துறையின் விசாரணைக்கு ஆஜராகினர். ஆனால், காலை 8:00 முதல் மாலை 6:00 மணி வரை, அவர்களை தங்களுடைய அலுவலகத்தில் காத்திருக்க வைத்துள்ளனர். மேலும், விசாரணை நடக்கும் இடம் தொடர்பாக அலைக்கழித்துள்ளனர். இவ்வாறு அவர் வாதிட்டார்.இதையடுத்து, 'மாவட்ட கலெக்டர்களுக்கு வேறு பணிகளும் உள்ளன. அவர்களை வீணாக காத்திருக்க வைக்கக்கூடாது. அனாவசியமாக அவர்களை துன்புறுத்துவதோ, அலைக்கழிப்பு செய்யவோ கூடாது' என, அமலாக்கத் துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 35 )

Venkataraman
மே 10, 2024 23:47

அந்த கலெக்டர்கள் அமுலாக்கத்துறை கேட்ட விளக்கங்களையும் ஆவணங்களையும் தரவில்லை என்று தெரிவித்துள்ளது மணல் கொள்ளையில் கலெக்டர்களுக்கும் தொடர்பு உள்ளதாக அமுலாக்கதுறை நம்புகிறது


A Veeramani
மே 08, 2024 22:24

இந்த கலக்டர்ஸ் மட்டும் பொதுமக்களை எவ்வளவு காக்கவைகிறார்கள் எவ்வளவு அலயவிடுகிறார்கள்? இவர்கள் என்ன ராஜ வம்சமா? இவர்கள் முதலில் தப்பான முகவரியில் சென்று ஆஜர் ஆனதாக ஒரு தகவலும் உள்ளது


a.s murthy
மே 08, 2024 16:33

விசாரணைக்கு வரும் சிலர் தந்திரமாக ஞாபகம் இல்லை, தெரியாது, மௌனம் இப்படி சொன்னால் விட்டுவிட்டு போங்க, போங்க கலெக்டரை கூப்பிடுங்க இந்த சிப்பி உச ஏஜெண்ட்


Lion Drsekar
மே 08, 2024 11:56

பாமர மக்களுக்கு ஆட்சியாளர் யார் என்றே தெரியாது, சென்னை போன்ற பெருநகரங்களில் வசிப்பார்கள் சம்பளத்துக்கு வேலை செய்பவர்களுக்கு அப்படி ஒரு பதவி இருக்கிறதா என்றே தெரியாது இது சத்தியம், மேலும் இன்றைக்கு எல்லா இடங்களிலும் தரகர்கள் இருப்பதால் யாருக்குமே இந்த பதவியில் இருக்கும் நபர்களை சிந்திக்கவேண்டிய ரூ வசியமும் இல்லாமல் போனது ஆனால் அவர்களை அலையவிட்டனர் என்ற செய்தி இந்த அலுவலக ஊழியர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெரு மகிழ்ச்சியாக இருக்கும், பிறர்க்கு இன்ன முற்பகல் செய்யின் தனக்குஇன்னா பிற்பகல் காமே யாரும் பொய்த்தது இல்லை, வந்தே மாதரம்


sethu
மே 08, 2024 09:12

அமலாக்கத்துறையை கொண்டு வந்ததே திமுக கூட்டணி காங்கிரசின் பி சிதம்பரம்தான், இன்னைக்கு என்னமோ யோக்கியர்கள் மாதிரி நடிக்கிறார்கள் கபில்சிபல் ஒரு கேடுகெட்ட சீனாவின் கைக்கூலி அவர் சொல்றார் இவர்களுக்கு வேலை இருக்குனு என் இங்கு வில்சன் என்ற ஒரு ...தமிழனுக்கு விரோதியாக கோளச்சுக்கிட்டு அலையும் அது சுப்ரீம் கோர்ட்டில் குறைக்காத தண்டமாக பல கோடி தமிழனின் வரிப்பணம் வடநாட்டான் வக்கீலுக்கு குடுத்து இந்த மகா யோக்யர்களை காக்கணுமா நீ யோக்கியனாக இருந்தால் எட்டு லட்சம் கோடிக்கு கடனுக்கு கணக்கு காட்டு


Kayjayes Kayjayes
மே 08, 2024 09:07

ஒரு சாதாரண சுப்ரீம் கோர்ட்டில் வாதாடக் கூடிய வக்கீல் போதுமே ஏன் அதிகமாக ஃபீஸ் வாங்கும் வக்கீல்? ஈடி ஒன்றும் சும்மா தப்பே செய்யாதவர்களை பிடிப்பதில்லை தவறு செய்யவில்லை என்றால் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் நிரூபிக்கட்டுமே விசாரணை நடப்பில் உள்ள போது சட்டத்தின் குறுக்கீடு சந்தேகத்தை வலுப்படுத்தாதா?


S.jayaram
மே 08, 2024 07:24

நீதி என்பது வலியவர்களின் கைப்பாவை ஆகி வெகு நாட்களாக ஆகி விட்டது ஒரு சாதாரண மணல் கொள்ளைக்கு வாதாட தமிழ்நாட்டின் அரசின் சம்பளம் பெறும் தலைமை வக்கீலால் முடியாத அப்படி திறமை அற்றவர் ஏன் பதவி வகிக்கணும் அதிக சம்பளம் பெறும் தனியார் வக்கீல் எதற்கு, இவருக்கு யார் பணத்தில் ஃபீஸ் கட்டுவது, மக்கள் வர்ப்பணத்திலா அல்லது அந்த ஐந்து மாவட்ட கலெக்டர்கள் சம்பள பணத்திலா? நாடு எங்கே போகிறது


Godfather_Senior
மே 07, 2024 18:11

கொலிஜியம் சிஸ்டத்தை மூடிவிட்டு NJCI கொண்டுவந்தால் மட்டுமே சட்டம் ஒழுங்கு சீராகும் அதுவரை, சீனாக்காரன்கிட்ட கூடுதல் சம்பளம் வாங்கும் கருப்புக்கோட்டு கழுதைகளின் வாய் கிழிய பேசி தேசத்தை நாசமாக்கும் கும்பல் எக்காளமிடத்தான் செய்யும்


J.V. Iyer
மே 07, 2024 12:51

காக்க வைக்காதீங்க சீக்கிரம்போய் மணல்கொள்ளைக்காரர்களுக்கு அவர்கள் உதவ வேண்டாமா?


venugopal s
மே 07, 2024 12:24

ஆணவத்தில் ஆடும் இந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் தமிழ்நாட்டுக்கு வந்தால் பதிலுக்கு இரண்டு பேரையாவது தமிழக காவல்துறை மூலமாக கஞ்சா கேஸ் கடத்தல் கேஸ் என்று எதையாவது போட்டு உள்ளே வைத்து நொங்கெடுத்தால் சரியாகி விடும்!


mani vannan
மே 08, 2024 07:22

மணல் மாபியாக்கள் ஒரு ரூபாய் கூட அரசு கஜானாவுக்கு செலுத்தாமல் போலி பில் தயார் செய்து பல்லாயிரம் கோடி கொள்ளை அடித்தவர்களுக்கு துணை இருப்பவர்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல் படி மணல் வியாபாரத்தை அரசே நடத்த வேண்டும் என்று கூறுகிறது ஆனால் அதை செய்யாத பலன் தான் இவையெல்லாம்


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை