உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அதிர்ச்சியில் உறைய வைக்கும் வினேஷ் எடைக்குறைப்பு ரகசியம் அம்பலம்!

அதிர்ச்சியில் உறைய வைக்கும் வினேஷ் எடைக்குறைப்பு ரகசியம் அம்பலம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'கடைசி நேரத்தில் வினேஷ் போகத் உடல் எடையை குறைக்க கடும் பயிற்சியில் ஈடுபட்டதை கண்டு, அவர் இறந்து விடுவாரோ என்று அஞ்சினேன்' என அவரது பயிற்சியாளர் வோலர் அகோஸ் தெரிவித்துள்ளார்.பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடந்த ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் இந்தியாவின் வினேஷ் போகத் 'பிரீஸ்டைல்' 50 கிலோ பிரிவில் பங்கேற்றார். பைனலுக்கு முன்னேறியும், எடை கூடியதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். வெள்ளி பதக்கம் கோரி சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயத்தில் செய்யப்பட்ட முறையீடு தள்ளுபடி ஆனது.

கூடுதலாக 2.7 கிலோ எடை

இந்நிலையில், கடைசி நேரத்தில் வினேஷ் போகத் உடல் எடையை குறைக்க பயிற்சியில் ஈடுபட்டதை கண்டு இறந்து விடுவாரோ என்று அஞ்சினேன்' என அவரது பயிற்சியாளர் வோலர் அகோஸ் தெரிவித்தார்.

அவர் சமூகவலைதளத்தில் வெளியிட்ட அறிக்கை:

அரையிறுதிப் போட்டி முடிந்ததும், வினேஷ் கூடுதலாக 2.7 கிலோ எடை இருந்தார். உடனடியாக 1 மணி நேரம் 20 நிமிடங்கள் கடுமையான உடற்பயிற்சி மேற்கொண்டார். ஆனாலும், 1.5 கிலோ கூடுதலாகவே இருந்தது.

வியர்வை வரவில்லை

பிறகு 50 நிமிடங்கள் கடும் உடற்பயிற்சி செய்தும், அவரது உடலிலிருந்து ஒரு சொட்டு வியர்வையும் வரவில்லை. நாங்கள் அப்போது எந்த ஒரு வாய்ப்பையும் விடுவதாக இல்லை. நள்ளிரவு முதல் காலை 5.30 மணி வரை பல்வேறு உடற்பயிற்சிக் கருவிகளில் அவர் பயிற்சி மேற்கொண்டார். ஒவ்வொரு மணி நேரமும் வெறும் 2-3 நிமிடங்கள் இடைவெளிகள் மட்டும் எடுத்துக்கொண்டு தொடர்ந்து பயிற்சி செய்துகொண்டே இருந்தார்.

ஒருமணி நேரம்

ஒருமுறை அவரால் ஒன்றும் செய்ய இயலாமல் மயங்கி விழுந்துவிட்டார். பெரும் சிரமப்பட்டு அவரை எழுப்பி உட்கார வைத்தோம். சற்று நேரத்திலேயே மீண்டும் உடற்பயிற்சியைத் துவங்கினார். ஒரு மணி நேரம் கடுமையான வெப்பம் நிறைந்த தண்ணீரில் இருந்தார். அவரது கடுமையான உடற்பயிற்சிகளை பற்றி இங்கே என்னால் விரிவாக சொல்ல முடியவில்லை. இப்போது ஒன்று மட்டுமே எனக்கு நினைவிருக்கிறது. அவர் கடும் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் போது, வினேஷ் போகத் இறந்துவிடுவாரோ என்று நான் அஞ்சினேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

தத்வமசி
ஆக 17, 2024 22:02

விசிறி வீசியது போதும். கிளம்புங்க எல்லாரும். காத்து வரட்டும்.


Dsukumar
ஆக 17, 2024 13:37

பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு ஆயுத சப்ளை, வங்கதேசத்தில் ஆட்சி கவிழ்ப்பு,ஹின்டன்பர்க் அறிக்கை அமெரிக்கா தில்லுமுள்ளு,அமெரிக்கா தில்லுமுள்ளு.பாரிஸ் ஒலிம்பிக் அமெரிக்கா தில்லுமுல்லு,அமெரிக்கா தில்லுமுள்ளு,முதலாளி ஏக்ட் அமெரிக்கா தில்லுமுள்ளு,அமெரிக்கா தில்லுமுள்ளு.


mothibapu
ஆக 17, 2024 12:50

அரசியல் இப்போது எல்லா இடங்களிலும் நுழைந்து விட்டது தான் பிரச்சினை. விளையாட்டு துறை கூத்தாக போய் விட்டது.


Sivagiri
ஆக 17, 2024 12:10

தெளிந்த , முன் யோசனையுடன் செயல்படும் பயிற்சியாளராய் இருந்தால் , சிஷியர்களை சரியாய் வழி நடத்துவார் - எல்லாம் டெம்பரவரி ஜாப் மாதிரி வர்றாங்க - போறாங்க - , , , மனம் அளவிற்கு ஸ்பீடாக , உடல் வேலை செய்ய வேண்டும் என்றால் , அஷ்டமா சித்திகளும் அடைந்த , சித்தர்களுக்குதான் முடியும் ,


Sridhar
ஆக 17, 2024 11:24

சுடுதண்ணியில் உக்கார்த்திருந்தாராம் தண்ணி உள்ள போயி எடையை உயர்தறதுக்கு இத விட வேற வழியே வேண்டாம் அடுத்தநாள் போட்டியில் சண்டைபோட மிகமுக்கியம் முந்தய இரவில் நல்ல தூக்கம். தூங்காம பயிற்சியே செஞ்சுட்டு இருந்தாங்கன்னா, சண்டை போட்டாலும் தோத்திருப்பாங்களே?


முருகன்
ஆக 17, 2024 11:07

விளையாட்டை பற்றி எதுவும் தெரியாத பலர் அவருக்கு எதிராக வேண்டும் என்றே எதிர் கருத்து கூறினார்கள்


Ganesh Subbarao
ஆக 20, 2024 12:18

உனக்கு அங்கே என்ன நடந்ததுன்னு தெரியுமா? விளையாட்டில் நீ பெரிய ஆளா?


Ramesh Sargam
ஆக 17, 2024 10:58

குறுகிய காலத்தில் எடை குறைப்பு என்பதெல்லாம் ஒரு பித்தலாட்டம்... நான் ஒரு வாரம் சாப்பிடாமல் இருந்தாலும் என்னுடைய எடை ஒரு கிலோ கூட குறைவதில்லை.


babu
ஆக 18, 2024 00:23

கடுமையான உடற்பயிர்ச்சி பசியைதூண்டும். பசிக்கு தளராமல் உடலுக்கு உழைப்பு கொடுத்தால்உடல் சுருங்கிவிடும்.


RAMAKRISHNAN NATESAN
ஆக 17, 2024 10:18

வெண்கலப்பதக்கமாவது வாங்கிக்கொண்டுதான் நாடு திரும்பவேண்டும் என்று நமது விளையாட்டு வீரர்களுக்கும், வீராங்கனைகளுக்கும் அழுத்தம் கொடுக்கப்படுகிறதோ என்ற சந்தேகம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை ....


நிக்கோல்தாம்சன்
ஆக 17, 2024 10:12

செய்வன திருந்த செய் , 56 கிலோ உள்ளவர் 50 கிலோ அளவில் போட்டியிட முயன்றார் என்றும் கூறுகிறார்கள் எது உண்மை ? INDI கூட்டணி ஊடகவிலாயர்கள் அவர்களின் தந்தை இவர்தான் என்று இனி கூறினாலும் சந்தேகம் இயற்கையாய் எழும் என்பதில் மாற்று கருத்து undo?


veeramani
ஆக 17, 2024 09:17

இந்திய போட்டியாளரின் எடை முன்பே தெரியும். பின்னர் எப்படி பங்கேற்க அனுமதி கொடுத்தீர்கள். சுமார் ஒரு கிலோகிராம் எடைவேண்டுமானால் குறைக்க இயலும். என்றான் அரை கிலோவை எப்படி முடியும். இதில் இந்திய மக்களின் அனுதாபம் பெற நாடகம் ஆடுகிறீர்கள். இந்திய மக்களுக்கு இழைத்த பெறும் அநீதி இது


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை