உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இன்று 78 வது சுதந்திர தினம்: தேசிய கொடி ஏற்றி மோடி உரை

இன்று 78 வது சுதந்திர தினம்: தேசிய கொடி ஏற்றி மோடி உரை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இன்று 78 வது சுதந்திர தினத்தை நாடு முழுதும் மக்கள் உற்சாகமாக கொண்டாட உள்ளனர். .இன்று காலை 7.30 மணிக்கு பிரதமர் மோடி டில்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்து உரையாற்றுகிறார் பிரதமராக மோடி 11-வது முறையாக தேசிய கொடி ஏற்றி வைக்கிறார். இதில் முப்படை வீரர்கள், துணை ராணுவப்படையினர் மற்றும் என்.சி.சி. உள்ளிட்ட மாணவர் படையும் பங்கேற்கிறது. சுதந்திர தின விழாவையொட்டி டில்லியில் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. பாதுகாப்பு பணிக்காக 3,500 போக்குவரத்து, 10 ஆயிரம் டில்லி போலீசார் செங்கோட்டையை சுற்றி நிறுத்தப்பட்டுள்ளனர். சிசிடிவி கேமராக்கள், செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் 700க்கும் மேற்பட்ட இடங்களில் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.தவிர விமான நிலையம், ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், வணிக வளாகங்கள், சந்தைகள் போன்ற மக்கள் அதிகமாக கூடும் இடங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Kasimani Baskaran
ஆக 15, 2024 05:43

கொலீஜியத்தில் இருந்தும், ஊழல் அரசியல்வாதிகளிடமிருந்தும், தேசப்பற்று இல்லாத குடிமக்களிடமிருந்தும் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைக்கவேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.


மேலும் செய்திகள்