மேலும் செய்திகள்
கேரளாவின் இரு மாவட்டங்களில் பரவுகிறது பறவை காய்ச்சல்
3 hour(s) ago
ரூ.12 கோடி செலவில் 51 ஜீப்கள்; ஒடிஷா வனத்துறை தாம் துாம்
3 hour(s) ago
கோழிக்கோடு: கேரளாவில் டாக்டர்கள் அலட்சியத்தால், 4 வயது சிறுமிக்கு விரலுக்கு பதிலாக நாக்கில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் உள்ள கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், கையில் உள்ள ஆறாவது விரலை நீக்குவதற்காக 4 வயது சிறுமி அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்குள்ள குழந்தைகள் நல மையப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு, சமீபத்தில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி, அறுவை சிகிச்சை முடிந்து வார்டுக்கு அழைத்து வரப்பட்ட சிறுமியை பார்த்த அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். கை விரலுக்கு பதிலாக, சிறுமியின் நாக்கில் பஞ்சு வைக்கப்பட்டு இருந்ததை பார்த்த அவர்கள், இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் முறையிட்டனர். அப்போது தான், டாக்டர்களின் அலட்சியத்தால், சிறுமியின் கை விரலுக்கு பதில் நாக்கில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது தெரியவந்தது. இது குறித்து விளக்கம் அளித்த டாக்டர்கள், 'ஒரே தேதியில் இரண்டு சிறுமியருக்கு அறுவை சிகிச்சை செய்ய திட்டமிடப்பட்டதால் நேர்ந்த தவறு இது. இந்த அறுவை சிகிச்சையால் சிறுமிக்கு எந்த பாதிப்பும் இருக்காது' என, தெரிவித்தனர்.'நாக்கில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதால், சிறுமிக்கு ஏதேனும் பாதிப்பு வந்தால், அதற்கு மருத்துவமனையே பொறுப்பு' என தெரிவித்த குடும்பத்தினர், இது குறித்து போலீசில் புகார் அளிக்க திட்டமிட்டுள்ளனர். இதற்கிடையே, சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி, மாநில மருத்துவக் கல்வி இயக்குனருக்கு, கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் உத்தரவிட்டுஉள்ளார். இதற்கிடையே, சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்த டாக்டர் ஜான்சன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
3 hour(s) ago
3 hour(s) ago