வாசகர்கள் கருத்துகள் ( 1 )
Fantastically Diesel engine entered agricultural field
பாட்னா: பீஹார் மாநிலம், கயா மாவட்டத்தின் வாசிர்கஞ்ச் ரயில் நிலையத்தில் இருந்து டீசல் இன்ஜின் ஒன்று, பெட்டிகள் ஏதுமின்றி கயா ரயில் நிலையத்துக்கு நேற்று முன்தினம் சென்றது. ரகுநாத்பூர் கிராமம் அருகே, லுாப் லைன் எனப்படும் கிளை தண்டவாளத்தில் சென்ற ரயில் இன்ஜின் குறிப்பிட்டஇடத்தில் மீண்டும் மெயின் லைனில் இணைய வேண்டிய ரயில் இன்ஜின், இணையாமல் நேராக சென்றது. இதையறிந்த ரயிலின் லோகோ பைலட் கீழே குதித்து தப்பினார். அதன்பின், ரயில் இன்ஜின் சிறிது துாரம் சென்று தண்டவாளம் முடிவில் வைக்கப்பட்டிருந்த தடுப்புக்கட்டையை இடித்து தள்ளியபடி வயல்வெளியில் இறங்கியது. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள், ஆர்வமுடன் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தனர். தகவல் அறிந்து வந்த ரயில்வே அதிகாரிகள், ரயில் இன்ஜினை மீண்டும் தண்டவாளத்தில் துாக்கி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
Fantastically Diesel engine entered agricultural field