மலை முகடுகளை தழுவிய மேகங்களை ரசிக்கும் பயணிகள்
மூணாறு:மூணாறு அருகே ராஜமலையில் மலை முகடுகளை தழுவிச் சென்ற மேக கூட்டங்களின் அழகை சுற்றுலா பயணிகள் வெகுவாக ரசித்தனர்.மூணாறு அருகே இரவிகுளம் தேசிய பூங்காவுக்கு உட்பட்டது ராஜமலை. அங்கு வரையாடுகளை காணவரும் சுற்றுலா பயணிகளை வனத்துறையினர் அனுமதிக்கின்றனர்.முற்றிலும் மலைப் பகுதி என்பதால் செங்குத்தான பாறைகள், புல்மேடுகள், காடுகள், நீரோடைகள், பள்ளத்தாக்குகள் என இயற்கை அழகு கொட்டி ரம்யமான சூழலுடன் இருக்கும். இந்தச் சூழலுக்கு மேலும் அழகு சேர்க்கும் வகையில் தாழ்வான பகுதிகளில் இருந்து உயர்ந்து வரும் மேகக் கூட்டங்கள் மெல்ல, மெல்ல பயணித்து மலை முகடுகளை தழுவிச் செல்லும்.அந்த மேகங்கள் சுற்றுலா பயணிகளை மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் வருடிச் செல்லும். அந்த இதமான, குளிரான சூழலை அனுபவித்தவாறு மேகக் கூட்டங்களின் அழகை பயணிகள் ரசித்து வருகின்றனர்.