உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வால்மீகி முறைகேடு  பலிகட ா ஆக்க முயற்சி ?

வால்மீகி முறைகேடு  பலிகட ா ஆக்க முயற்சி ?

பெங்களூரு: வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில் நடந்த முறைகேட்டில், அதிகாரிகளை பலிகடாவாக்க முயற்சி நடப்பதாக, எதிர்க்கட்சித் தலைவர் அசோக் குற்றஞ்சாட்டி உள்ளார்.பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில் நடந்த முறைகேட்டுக்கு, அதிகாரிகள் தான் முழுக்க முழுக்க காரணம் என்பது போல, முதல்வர் சித்தராமையா பேசி வருகிறார்.இதன் மூலம் அதிகாரிகளை பலிகடாவாக்கி, முறைகேடு செய்த முன்னாள் அமைச்சர் நாகேந்திரா, வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தின் தலைவர் பசனகவுடா தத்தல் ஆகியோரை காப்பாற்றும் முயற்சி நடக்கிறது.நாகேந்திரா சிறைக்கு சென்றுவிட்டார். தத்தலும் கூடிய விரைவில் சிறைக்குச் செல்வார். வால்மீகி மேம்பாட்டு ஆணையம் முறைகேட்டில் முதல்வருக்கும் பங்கு உள்ளது.ஆணையத்தின் நிர்வாக இயக்குனராக இருந்த பத்மநாபா மீது தான் அனைவரும் குற்றச்சாட்டு சொல்கின்றனர்.ஒரு அதிகாரியால் 94 கோடி ரூபாய் பணத்தை தனியாக முறைகேடு செய்ய முடியுமா? அமலாக்கத் துறையின் செயல்பாட்டை அரசில் உள்ளவர்கள் விமர்சிக்கின்றனர். அவர்களுக்கு தைரியம் இருந்தால் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது வழக்கு போடுங்கள் பார்க்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை