ரூ.2.5 கோடி மோசடியில் இருவர் கைது
மூணாறு:கேரள மாநிலம் பத்தனம்திட்டா, மல்லப்பள்ளியைச் சேர்ந்த பிரமோத் வர்க்கீஸ், 42, கருநாகபள்ளியைச் சேர்ந்தவர் உம்மன்தாமஸ், 67. இவர்கள் வெளிநாடுகளுக்கு வேலைக்கு ஆட்களை அனுப்பும் ஏஜன்ட் ஆக செயல்பட்டு வந்தனர்.கடந்தாண்டு, இடுக்கி மாவட்டத்தில் கட்டப்பனை உட்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 15க்கும் மேற்பட்டோரிடம், நியூசிலாந்தில் வேலை வாங்கி தருவதாக 2.5 கோடி ரூபாய் வரை பெற்று மோசடி செய்தனர். கட்டப்பனை போலீசார் இருவரையும் கைது செய்தனர். இருவரும் கொல்லம், கருநாகபள்ளி உட்பட பல பகுதிகளில் ஏராளமானோருக்கு வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றியதாகவும் தெரியவந்தது.