உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜெகன் கட்சி எம்.பி.,க்கள் இருவர் திடீர் ராஜினாமா

ஜெகன் கட்சி எம்.பி.,க்கள் இருவர் திடீர் ராஜினாமா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகனின் ஒய்.எஸ்.ஆர்., காங்கிரசைச் சேர்ந்த இரு ராஜ்யசபா எம்.பி.,க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இருவரும் தெலுங்கு தேசம் கட்சியில் சேர உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆந்திராவில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்தித்ததை அடுத்து, முதல்வராக இருந்த ஜெகன்மோகன் ரெட்டி பதவி விலகினார்.மத்தியில் ஆட்சியில் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு தற்போது முதல்வராக உள்ளார். இந்த சூழலில், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராஜ்யசபா எம்.பி.,க்களான பீதா மஸ்தான் ராவ் ஜாதவ் மற்றும் வெங்கடரமண ராவ் மோபிதேவி ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ராஜ்யசபா தலைவரும், துணை ஜனாதிபதியுமான ஜக்தீப் தன்கர், அவர்களின் ராஜினாமாவை ஏற்றுக் கொண்டதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து, ராஜ்யசபாவில் ஒய்.எஸ்.ஆர்.காங்.,கின் எம்.பி.,க்கள் எண்ணிக்கை ஒன்பதாக குறைந்துள்ளது.பதவி விலகிய மஸ்தான் ராவ் மற்றும் மோபிதேவி ஆகியோர் மீண்டும் தங்களை தெலுங்கு தேசம் கட்சியில் இணைத்துக் கொள்ள தயாராகி வருவதாகவும் சொல்லப்படுகிறது. இருவரின் ராஜினாமாவை அடுத்து, நடத்தப்படும் இடைத்தேர்தலில் வெற்றி பெறுவதன் வாயிலாக, ராஜ்யசபாவில் நுழையும் வாய்ப்பு தெலுங்கு தேசம் கட்சிக்கு உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இதனால், அங்கு தேசிய ஜனநாயக கூட்டணியின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !