உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / யு.ஜி.சி., நெட் மறு தேர்வு வரும் 21ல் துவக்கம்

யு.ஜி.சி., நெட் மறு தேர்வு வரும் 21ல் துவக்கம்

புதுடில்லி, வினாத்தாள் கசிவால் ரத்து செய்யப்பட்ட யு.ஜி.சி., நெட் மறுத்தேர்வுக்குரிய விரிவான கால அட்டவணையை என்.டி.ஏ., எனப்படும் தேசிய தேர்வு முகமை நேற்று வெளியிட்டது.பல்கலை மற்றும் கல்லுாரிகளில் உதவிப் பேராசிரியராக பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான மத்திய அரசின் உதவித்தொகை பெறவும், பி.ஹெச்டி., மாணவர் சேர்க்கைக்கும் நெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்தாண்டு ஜூன் பருவத்துக்கான முதல்கட்ட நெட் தேர்வு நாடு முழுதும் 1,205 மையங்களில் ஜூன் 18-ம் தேதி துவங்கியது. இந்த தேர்வை 9.85 லட்சம் பட்டதாரிகள் எழுதினர். இந்நிலையில், இந்த தேர்வில் வினாத்தாள் கசிந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து இந்த தேர்வை மத்திய அரசு ரத்து செய்ததுடன் இந்த விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ., விசாரணை நடத்தவும் உத்தரவிட்டது.இந்நிலையில், நெட் மறுத்தேர்வு வரும் 21 முதல் செப்., 4-ம் தேதி வரை கணினி வாயிலாக நடத்தப்படும் என, தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இதையடுத்து, நெட் தேர்வுக்குரிய பாடவாரியான கால அட்டவணையை அந்த அமைப்பு நேற்று வெளியிட்டது. அதன் விபரங்களை ugcnet.nta.nic.inஎன்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம். தேர்வு மையம், ஹால்டிக்கெட் வெளியீடு போன்ற கூடுதல் விபரங்களை https://www.nta.ac.in/ எனும் வலைதளத்தில் விரைவில் வெளியிடப்படும் எனவும் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்