உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேவையின்றி மோதல்: குமாரசாமி பாய்ச்சல்

தேவையின்றி மோதல்: குமாரசாமி பாய்ச்சல்

பெங்களூரு: மத்திய கனரக தொழிற்துறை அமைச்சர் குமாரசாமி நேற்று அளித்த பேட்டி:மத்திய அரசுடன், கர்நாடக காங்கிரஸ் தேவையின்றி மோதுகிறது. பிரதமர் மோடியுடன், முதல்வர் சித்தராமையா வரிந்து கட்டி கொண்டு, சண்டைக்கு நிற்கிறார். பல்வேறு மாநிலங்கள், மத்திய அரசுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு, தங்களுக்கு தேவையானதை பெறுகின்றன.கர்நாடக சித்தராமையா அரசு, உள் நோக்கத்துடன் மத்திய அரசை விமர்சிப்பதை வழக்கமாக வைத்துள்ளது. மத்திய அரசுடன் சுமூகமாக இருந்தால், மாநிலத்துக்கு அனுகூலமாக இருக்கும். எந்த பிரச்னைகள் இருந்தாலும், அமர்ந்து பேசினால் சரி செய்து கொள்ளலாம். ஆனால் காங்கிரஸ் தலைவர்கள், மத்திய அரசின் மீது குற்றம்சாட்டுகின்றனர். இதனால் மாநிலத்துக்கு பின்னடைவு ஏற்படுமே தவிர, காங்கிரசுக்கு அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் நம்பிக்கையை காப்பாற்றுவேன். இளம் தலைமுறையினருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்துவது, பிரதமரின் குறிக்கோளாகும். என் மீது நம்பிக்கை வைத்து, வேலை வாய்ப்பை உருவாக்கும், முக்கியமான துறையை என்னிடம் ஒப்படைத்துள்ளார். என் துறையை சரியாக புரிந்து கொள்ள, குறைந்தபட்சம் மூன்று மாதங்கள் தேவைப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை