உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரீல்ஸ் எடுக்க ரயிலில் தொங்கிய வாலிபர்; விசாரணைக்கு ரயில்வே உத்தரவு

ரீல்ஸ் எடுக்க ரயிலில் தொங்கிய வாலிபர்; விசாரணைக்கு ரயில்வே உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லக்னோ; உ.பி.யில் ரீல்ஸ் எடுக்க,வாலிபர் ஒருவர் ரயிலில் தொஙகியபடி பயணித்த வீடியோ வைரலாகி உள்ளது.உ.பி.யில், கஸ்கஞ்ச்-கான்பூர் இடையே ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் ஏராளமானோர் பயணித்துக் கொண்டிருந்தனர். அப்போது ரயிலில் ஒரு பெட்டியின் வெளியே ஜன்னல் கம்பிகளை பிடித்தபடி வாலிபர் தொங்கியபடி இருந்தார்.ரயிலில் ஏறவோ அல்லது இறங்கவோ முயற்சித்து எதிர்பாராத விதமாக தொங்கியபடி தவிப்பதாக உள்ளே இருந்த பயணிகள் நினைத்தனர். அவரை எப்படியாவது காப்பாற்றியாக வேண்டும் என்று அவர்கள் எத்தனித்தனர்.சில நிமிடங்கள் கடந்த போதும், அந்த வாலிபர் அப்படியே தொங்கியபடி இருந்தார். குழப்பம் அடைந்தவாறு அவர்கள் யோசிக்க, அதன்பிறகே ரீல்ஸ் எடுக்க இப்படி வீடியோ எடுக்கப்படுகிறது என்பதை அறிந்தனர்.சில கி.மீ., தூரம் வரை தொங்கியவாறு வந்த அந்த வாலிபர், ரயில் மெதுவாக ஓரிடத்தில் நின்றது. அடுத்த நொடியே கைகளை விடுவித்து, ரயிலில் இருந்து குதிக்க முற்பட்டு கீழே விழுந்தார். பின்னர் மீண்டும் அதே ரயிலில் ஏறி பயணித்துள்ளார்.இந்த வீடியோ இணையத்தில் வைரலாக, இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Narendar Narendar
மார் 12, 2025 22:28

அவர்களால் வல்லரசு ஆகமுடியாது.


Ramesh Sargam
மார் 12, 2025 12:06

சாகட்டும் என்று விட்டுவிடவேண்டும்.


angbu ganesh
மார் 12, 2025 10:55

பெத்தவங்கல சொல்லி என்ன பிரோயோஜனம் இதுங்க படிக்க போறேன்னு இப்படி பொறுக்கித்தனம் பண்ண அவங்க என்ன பண்ணுவாங்க


தமிழன்
மார் 12, 2025 10:34

இன்னும் ???


user name
மார் 12, 2025 09:35

யோகியின் ஆட்சியில் கல்வி இன்மை வேலைவாய்ப்பு இன்மை போன்றவற்றால் இளைஞர்கள் தடம் மாறி செல்கின்றனர்


Kumar Kumzi
மார் 12, 2025 09:47

டாஸ்மாக் கொத்தடிமை யோகியை பற்றி கருத்து சொல்ல வந்துட்டான்யா


MUTHU
மார் 12, 2025 10:14

எப்பா நீ இங்கே சென்ட்ரல் ஸ்டேஷன் போனது இல்லையோ. ரெண்டு நாட்களுக்கு ஒருமுறை ஒரு கோட்டி கூட்டம் எதுக்கு சண்டை போடுறோம்னு தெரியாம சண்டை போட்டுட்டு இருப்பானுவ.


Ramalingam Shanmugam
மார் 12, 2025 10:43

நாட்டில் என்ன நடக்குதாம் 200 உபி


baala
மார் 12, 2025 09:10

அப்படியா எனக்கென்னவோ மூளை அவ்வளவுதான் என்று தோன்றுகிறது.


अप्पावी
மார் 12, 2025 08:37

இதெல்லாம் ரெண்டு கோடி வேலைல ஒண்ணா எடுத்துக்கணும். ரீல்ஸ் போட்டு நிறைய பேர் பார்த்தால் இவனுக்கு துட்டு கிடைக்கும். டாக்ஸ் கட்டுவான். அரசுக்கு வருமானம். வல்லரசாகிடலாம்.


Kumar Kumzi
மார் 12, 2025 09:48

ஓசிகோட்டருக்கும் ஓவாவுக்கும் ஒட்டு போடுற கொத்தடிமை கருத்து சொல்லுறா


A Viswanathan
மார் 12, 2025 07:39

இவனை எல்லாம் வாழ்நாள் முழுக்க டிரைனில் ஏற அனுமதிக்க கூடாது.