உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் டிஸ்சார்ஜ்

துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் டிஸ்சார்ஜ்

புதுடில்லி உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் குணமடைந்ததை அடுத்து நேற்று வீடு திரும்பினார்.நம் நாட்டின் துணை ஜனாதிபதி மற்றும் ராஜ்யசபா தலைவராக இருப்பவர் ஜக்தீப் தன்கர், 73. இவருக்கு கடந்த 9ம் தேதி அதிகாலை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து, டில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட ஜக்தீப் தன்கருக்கு இதயவியல் துறைத்தலைவர் ராஜிவ் நரங்க் தலைமையிலான குழு சிகிச்சை அளித்தது. துணை ஜனாதிபதியை பிரதமர் நரேந்திர மோடி, மத்திய சுகாதாரத் துறை அமைச்சரும், பா.ஜ., தேசிய தலைவருமான நட்டா உள்ளிட்டோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.ஜக்தீப் தன்கர் உடல்நிலை சீரானதை அடுத்து நேற்று 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டார். மேலும் சில நாட்களுக்கு ஓய்வெடுக்கும்படி அவரை, டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இந்நிலையில், தனக்கு சிகிச்சை அளித்த டாக்டர்களுக்கு ஜக்தீப் தன்கர் நன்றி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

தமிழன்
மார் 13, 2025 13:07

ஒரு இனத்தை அழிக்க வேண்டும் என்றால் அந்த இனத்தின் மக்கள் பேசும் மொழியை முதலில் அழிக்க வேண்டும் என்று பேசியவர்தானே இவர்


abdulrahim
மார் 13, 2025 12:33

இனியாவது பாஜகவிற்கு ஜால்றா அடிக்காமல் நேர்மையோடு அவையை நடத்துவாரா


Appa V
மார் 13, 2025 05:40

தலைப்பே ஒரு மாதிரி இருக்கு ..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை