உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தங்கச்சுரங்க வழக்கில் வெற்றி முன்னாள் தொழிலாளர்கள் ஊர்வலம்

தங்கச்சுரங்க வழக்கில் வெற்றி முன்னாள் தொழிலாளர்கள் ஊர்வலம்

தங்கவயல்: ''தங்கச்சுரங்க முன்னாள் தொழிலாளர்களுக்கு இறுதி செட்டில்மென்டில் நிலுவைத் தொகை வழங்கக் கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், தொழிலாளர்களுக்கு வெற்றி கிடைத்தது,'' என, வக்கீல் சென்ன மாளிகை தெரிவித்தார்.இரண்டு ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கின் விசாரணை முடிந்து, மே 9ல் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதை முன்னாள் தொழிலாளர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.

பாராட்டு விழா

இவ்வழக்கில் முன்னாள் தொழிலாளர்கள் தரப்பில் ஆஜரான வக்கீலும், தங்கச் சுரங்க முன்னாள் துணைப் பொது மேலாளருமான சென்னமாளிகைக்கு நேற்று, முன்னாள் தொழிலாளர்கள் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.உரிகம் ஐந்து விளக்கு பகுதியில் இருந்து அவரும், வழக்குக்கு உதவிய மோகன் கிருஷ்ணாவும் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.தங்கவயல் நேரு கல்யாண மண்டபத்தில் நடந்த பாராட்டு விழாவில், முன்னாள் தொழிலாளர்கள் சங்கத் தலைவர் டாக்டர் ராஜேந்திர குமார், டாக்டர் சம்பத்குமார், மூர்த்தி, விஜயராகவன், பன்னீர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நன்றி தெரிவிப்பு

பாராட்டுக்கு நன்றி தெரிவித்து, வக்கீல் சென்னமாளிகை பேசியதாவது:தங்கச் சுரங்கம், 2001 மார்ச் 1ல் மூடப்பட்டது. அதன் பின்னர், தங்கச்சுரங்கத்தை ஏற்று நடத்த, கூட்டுறவுச் சங்கங்களின் வழக்குகள், குளோபல் டெண்டர் மூலம் தங்கச்சுரங்கத்தை மீண்டும் நடத்த டெண்டர், கம்பெனியை ஏற்கும் நிறுவனம் தொழிலாளர்களுக்கு 50 சதவீத நிலுவைத்தொகை இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது.இதுவரை உலகளாவிய டெண்டர் விடவும் இல்லை. நிலுவைத் தொகையும் வழங்கப்படாமல் இருந்தது. இதனால், தொழிலாளர்களுக்கு நிலுவைத் தொகை வழங்க வேண்டும் என்று முன்னாள் தொழிலாளர்கள் தரப்பில், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் 2020ல் வழக்கு தொடரப்பட்டது.நிலுவைத் தொகைக்கு, ஆண்டுக்கு 6 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என்று நீதிபதி சி.எம்.பூனச்சா மே 9ல் தீர்ப்பளித்தார்.இவ்வாறு அவர் பேசினார்.ஜோசப், சேவியர், செல்வம், சேது, கணேசன், பட்டாபி, கண்ணாயிரம் உட்பட பலர் பங்கேற்றனர்.தங்கச் சுரங்க முன்னாள் தொழிலாளர்கள் தொடர்ந்த வழக்கில் வெற்றி பெற்ற வக்கீல் சென்னமாளிகைக்கு நேற்று நடந்த பாராட்டு விழாவுக்கு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

N Annamalai
ஜூன் 16, 2024 17:17

வாழ்த்துக்கள் .நலமாக வாழ்க


Ramesh Sargam
ஜூன் 16, 2024 11:18

தொழிலாளர்கள் ஒற்றுமை ஓங்குக. ஒற்றுமையுடன், நேர்மையுடன் போராடினால் வெற்றி நிச்சயம்.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை