உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பணக்கடவுளை பார்க்க 5 கிலோ நகைகளுடன் வந்த இவர் யார் ?

பணக்கடவுளை பார்க்க 5 கிலோ நகைகளுடன் வந்த இவர் யார் ?

ஹைதராபாத்: புத்தாண்டு தினத்தில் திருப்பதி வெங்கடாசலபதியை தரிசிக்க ஒருவர் 5 கிலோ நகைகளை அணிந்தபடி வந்ததை பலரும் வியப்புடன் பார்த்தனர். ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்தவர் கொண்டா விஜயகுமார். இவர் தெலுங்கானா ஒலிம்பிக் சங்க இணை செயலாளராக பதவி வகித்து வருகிறார். இவர் தனது கழுத்து மற்றும் கைகளில் அதிக பருமன் மற்றும் எடை கொண்ட தங்க ஆபரணங்களை அணிந்து திருப்பதிக்கு வந்தார். ' நான் அடிக்கடி திருமலை திருப்பதியை வணங்க வருவது வழக்கம், புத்தாண்டில் தரிசிக்க வந்தேன். அதிக நகைகள் அணிவது எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆகையால் இவ்வாறு அணிந்து வந்தேன்' என்றார். இவரை பார்க்க பலரும் கூடினர். அணிந்திருந்த நகை எடை 5 கிலோ இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

sankaranarayanan
ஜன 01, 2025 18:46

அய்யா தப்பித்தவறி திராவிட ஆட்சியில் தமிழ் நாட்டிற்குள் வந்து விடாதீர்கள் பிறகு உங்கள் 5-கிலோ தங்க நகைகளை கைப்பற்றி எங்களது அறநிலையத்துறை அமைச்சர் அவைகளை உருக்கி வங்கியில் வைத்து அதற்கு எதிராக பணமும் வாங்கிவிடுவார் இப்ப என்ன செய்யுவே என்றே கூறிவிடுவார் வாயை திறக்காமல் அங்கேயே இருந்துவிடுங்கள்


என்றும் இந்தியன்
ஜன 01, 2025 16:26

5 கிலோ வகை என்றே வைத்துக்கொள்ளலாம். 1 கிலோமீட்டர் வெறும் 5 கிலோ அரிசியை பையில் எடுத்துக்கொண்டு வரும்போது இவ்வளவு வலி வலிக்கின்றதே இவன் 5 கிலோ நகையை கழுத்தில் சுமந்து எப்படி இருக்கின்றானோ


baala
ஜன 01, 2025 12:35

இந்த நகைகள் உண்மையில் சம்பாதித்த பணத்தில் வாங்கியதா? இல்லை கொள்ளை அடித்த பணத்தில் வாங்கியதா?


N Sasikumar Yadhav
ஜன 01, 2025 15:53

உங்க திராவிட மாடல் மாதிரி கிடையாது . உழைத்த பணமென்பதாவ்தான் இப்படி கோயிலுக்கு வந்திருக்கிறார் அவர்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை