உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஒலிம்பிக் தகுதி நீக்கம்; தீர்ப்பாய முடிவை எதிர்க்க வினேஷ் போகத்துக்கு விருப்பமில்லை: ஹரிஷ் சால்வே

ஒலிம்பிக் தகுதி நீக்கம்; தீர்ப்பாய முடிவை எதிர்க்க வினேஷ் போகத்துக்கு விருப்பமில்லை: ஹரிஷ் சால்வே

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஒலிம்பிக் தகுதி நீக்க விவகாரத்தில் சர்வதேச தீர்ப்பாயத்தின் தீர்ப்பை எதிர்த்து போராட வலியுறுத்தியும், வினேஷ் போகத் மறுத்துவிட்டார் என வக்கீல் ஹரிஷ் சால்வே தெரிவித்தார்.இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் 29. பாரிஸ் ஒலிம்பிக்கில் பிரீஸ்டைல் , 50 கிலோ பிரிவின் பைனலுக்கு முன்னேறினார். பைனலுக்கு முன் நடந்த சோதனையில் நிர்ணயிக்கப்பட்ட 50 கிலோ எடையை விட 100 கிராம் கூடுதலாக இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். சர்வதேச ஒலிம்பிக், சர்வதேச மல்யுத்த கூட்டமைப்பு( UwW) முடிவை எதிர்த்து சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயத்தில் (சிஏஎஸ்) அப்பீல் செய்த வினேஷ் போகத், தனக்கு வெள்ளிப்பதக்கம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.

ஏமாற்றம்

இதற்கு பிரான்சை சேர்ந்த வழக்கறிஞர்கள் சிலர் மற்றும் இந்திய ஒலிம்பிக் சங்கத்தினர் உதவி செய்தனர். இந்தியாவைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் ஹரீஸ் சால்வே மற்றும் விதுஷ்பாத் சின்ஹானியா ஆஜராகி வாதாடினர். ஆனாலும் வினேஷ் போகத்துக்கு ஆதரவாக தீர்ப்பு வரவில்லை. இதனால் அவர் பதக்கம் இல்லாமல் பாரிசில் இருந்து வெறுங்கையுடன் திரும்ப வேண்டியிருந்தது. சில தினங்களுக்கு முன், இந்திய தடகள சங்க தலைவர் பி.டி.உஷா என்னை ஆதரிப்பது போல் நடிக்கிறார் என குற்றம் சாட்டியிருந்தார். வக்கீல்கள் மெத்தனமாக நடந்து கொண்டதால், இறுதியில் பதக்கத்தை இழக்க நேரிட்டது என்றும் அவர் தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார்.

விருப்பமில்லை

இந்நிலையில், வக்கீல் ஹரிஷ் சால்வே கூறியதாவது: 'தகுதி நீக்க விவகாரத்தில் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய வினேஷ்க்கு பல்வேறு உதவிகள் செய்தோம். நாங்கள் கடுமையாக போராடினோம். உண்மையில், தீர்ப்பாய முடிவுக்கு எதிராக சுவிஸ் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில், எதிர்த்துப் போராடலாம் என்று அந்தப் பெண்ணுக்கு நான் முன்மொழிந்தேன். அவர் மறுத்துவிட்டார். தொடர்ந்து எதிர்த்து போராட தொடர விரும்பவில்லை' என்றார்.விளையாட்டுப் போட்டிகளில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஒரு நாள் கழித்து, மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த வினேஷ் போகத் அரசியலில் குதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

nv
செப் 14, 2024 21:52

இந்த அம்மா தோற்ற ஒரு பெண்.. இன்னும் பல தோல்வியை இவர் சந்திக்கும் நாள் விரைவில் வரும்


Abdul Rawoof
செப் 14, 2024 16:21

பீசப்பி கட்சி இருக்கும் வரை நாடு முன்னேறாது


சிவா அருவங்காடு
செப் 14, 2024 14:19

பதவி அதிகார மோகம். ஆனால் ராகுலை நம்பி பாவம் இந்த பெண். புத்தி தெளியும் போது என்ன மிஞ்சுமோ.


S. Gopalakrishnan
செப் 14, 2024 13:38

அரசாங்கத்தை பகைத்துக் கொண்டு சர்வதேச அரங்கில் ராகுல் பப்பு போல கூக்குரல் இட முடியுமே தவிர நீதிமன்ற யுத்தம் செய்ய முடியாது. இதை கான்கிராஸ் கட்சி மற்றும் திரு. ஹரிஷ் சால்வே ஆகியோர் நன்கு அறிவர். நஷ்டப்பட்டது இந்த வீரர் தான் !


Kumar Kumzi
செப் 14, 2024 13:25

இனிமே இந்தியாவுக்கு எதிராக செயல்பட முடிவு பண்ணிட்ட இனி உன் காட்டில் பணமழை புயலாய் பெய்யும்


ponssasi
செப் 14, 2024 13:19

அவர்கள் தவறுதலாக தகுதிநீக்கம் செய்யவில்லை, விதிகளின் படிதான் நீக்கப்பட்டிருக்கிறார் அதை நாம் ஏற்று கொள்ளத்தான் வேண்டும். மேல் முறையிடு அப்பீல் இவையெல்லாம் காலம் கடத்தும் முயற்சி, உடல் எடையை குறைக்க அவரும் போராடி பார்த்துவிட்டார் முடியவில்லை, வென்றாலும் தோல்வியை ஒப்புக்கொண்டு வருவதே அழகு. நூறு கிராம் எடை அதிகமான ஒருவர் விதியை மீறி இந்தியரை வென்றிருந்தால் இந்திய அரசு பார்த்து கொண்டு சும்மா இருக்குமா? நாம் தாம் சும்மா இருபோமா?. வென்றவருக்கும் ஒரு வாழ்த்து, தோற்றவருக்கும் ஒரு வாழ்த்து


Srinivasan Krishnamoorthi
செப் 14, 2024 12:15

மால்யுத்த வீராங்கனை தகுதியானவர் தான். சர்வதேச மல்யுத்த சம்மேளனம் விதிகள் முன்னமே இந்தியா மல்யுத்த சங்கம் மற்றும் ஒவ்வொரு வீரவீராங்கனைக்கும் தெரியும். சிறு முயற்சி எடையை 2-3 கிலோ வரை குறைக்கும் உபாயங்களை தெரிந்தும் அலட்சியமாக இருந்தது தவறு. அதற்கு தண்டனை தான் இது. முதல் மூவரின் நிலையில் இருந்ததால் வெள்ளி பதக்கம் தனக்கு உரிமை உண்டு என கேட்டது சரியே. அவருக்கு ராசியில் இப்போது.


சமீபத்திய செய்தி