மேலும் செய்திகள்
2028க்குள் ஏர் டாக்சி சேவை; தனியார் நிறுவனம் அறிவிப்பு
3 hour(s) ago | 2
ஆரியங்காவில் நாளை:(டிசம்பர்-24)
5 hour(s) ago
சபரிமலையில் நாளை(டிசம்பர்-24)
5 hour(s) ago
சிக்கபல்லாப்பூர்: ''சிக்கபல்லாப்பூர் பா.ஜ., வேட்பாளர் சுதாகருக்கு, எலஹங்கா தொகுதியில் ஒரு லட்சம் ஓட்டுகள் முன்னிலை பெற்று தருவேன்,'' என்று, பா.ஜ., - எம்.எல்.ஏ., விஸ்வநாத் கூறினார்.லோக்சபா தேர்தலில் சிக்கபல்லாப்பூர் பா.ஜ., வேட்பாளராக, முன்னாள் அமைச்சர் சுதாகர் போட்டியிடுகிறார். எலஹங்கா பா.ஜ., - எம்.எல்.ஏ., விஸ்வநாத், தன் மகன் அலோக்கிற்கு வாய்ப்பு கேட்டார். ஆனாலும் சுதாகருக்கு, 'சீட்' கிடைத்ததால், அதிருப்தியில் இருந்தார். இதனால் விஸ்வநாத்தை, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சமாதானம் செய்தார்.இந்நிலையில், சிக்கபல்லாப்பூரில் நேற்று விஸ்வநாத் அளித்த பேட்டி: கடந்த லோக்சபா தேர்தலில், சிக்கபல்லாப்பூர் பா.ஜ., வேட்பாளருக்கு எனது தொகுதியில் இருந்து 45,000 ஓட்டுகள் வித்தியாசம் வந்தது. இம்முறை ஒரு லட்சம் ஓட்டுகள் முன்னிலை பெற்று கொடுப்பேன். ம.ஜ.த., எங்களுடன் கூட்டணியில் இருப்பது பலம். லோக்சபா தேர்தலுக்கு பின்னர், காங்கிரஸ் ஆட்சி கவிழும். பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி அரசு ஆட்சிக்கு வரும்.இவ்வாறு அவர் கூறினார்.
3 hour(s) ago | 2
5 hour(s) ago
5 hour(s) ago