உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வாக்காளர் பட்டியல் விவகாரம்: சபாநாயகர் ஓம்பிர்லாவுடன் ராகுல், பிரியங்கா சந்திப்பு

வாக்காளர் பட்டியல் விவகாரம்: சபாநாயகர் ஓம்பிர்லாவுடன் ராகுல், பிரியங்கா சந்திப்பு

புதுடில்லி: போலி வாக்காளர்களை உருவாக்க பா.ஜ,வுக்கு தேர்தல் ஆணையம் உதவுகிறது என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டிய நிலையில், இன்று லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவை திடீரென சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கடந்த 2-ம் தேதியன்று மேற்குவங் முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளதாவது: தேர்தலில் பா.ஜ., வெற்றி பெறுவதற்காக மோசடி நடந்து வருகிறது. மேற்கு வங்கத்தில் உள்ள வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை எண், போன்று போலி வாக்காளர்களை உருவாக்கி, இங்கு தேர்தலில் வெற்றி பெற பா.ஜ.,வுக்கு தேர்தல் கமிஷன் உதவுகிறது. எங்கள் மாநிலத்தில் அதுபோல் மோசடி செய்ய விட மாட்டோம் என்றார். இந்நிலையில் லோக்சபாவில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல், நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் குறித்து கேள்விகள் எழுப்பப்படுகின்றன. ஒவ்வொரு எதிர்க்கட்சிகளும் வாக்காளர் பட்டியல் குறித்து கேள்வி எழுப்புகின்றன. வாக்காளர் பட்டியல் முறைகேடு தொடர்பாக பார்லியில் விவாதம் நடத்த வேண்டும் என்றார்.பின்னர் லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லாவை காங். எம்.பி., ராகுல், தனது தங்கை பிரியங்காவுடன், இன்று சந்தித்து பேசினார்.அப்போது இந்தாண்டு, அடுத்தாண்டு பல்வேறு மாநிலங்களில் நடக்க உள்ள சட்டசபைகளுக்கு தேர்தல் நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெற வேண்டும். குறிப்பாக வாக்களர்பட்டியலில் உண்மையான வாக்காளர்கள் இடம் பெறும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

சந்திரன்
மார் 11, 2025 08:44

இந்த இத்தாலி கொழந்தைங்க என்ன சொல்லுதுங்க


Amruta Putran
மார் 11, 2025 01:11

Pappu


RAJ
மார் 10, 2025 23:53

ரவுலு ஓகே.. எதிர்க்கட்சி பர்புல இருக்கார்.. ..மேடம் என்ன பொறுப்? மத்த MPs?


Ganapathy
மார் 10, 2025 23:09

இதுல காமெடி என்னாக்க இவனுக்கே 5 பாஸ்போர்ட் இருக்கு. மேலும் இவன்மேல இங்கிலாந்து குடியுரிமையை திருட்டுதனமா வாங்குன கேசு வேற இருக்கு. அதாவது இந்த காங்கிரஸ் கூமுட்டக்கே 5 ஓட்டு இருக்கே. இவனுக்கு அதாவது தெரியுமா... கேனப்பய ஒருத்தன் வரி ஊழல்ல பெயில் வாங்கி பாராளுமன்ற எதிர்கட்சி தலைவரானா இப்படித்தான் கோக்கு மாக்கா நடக்கும்.


பேசும் தமிழன்
மார் 10, 2025 22:26

வாங்க தேசத்தில் இருந்து போலி வாக்காளர்களை இறக்குமதி செய்வதே நம்ம மமதை மேடம் தான்.... இவர் என்னடா என்றால் அடுத்தவர் பெயரில் புரளி அளந்து கொண்டு இருக்கிறார்.


Oru Indiyan
மார் 10, 2025 20:50

என்ன பேசினாலும்.. நீங்கள் தோற்க போவது உறுதி.


Ramesh Sargam
மார் 10, 2025 20:26

போலி வாக்காளர்களை உருவாக்குவதே காங்கிரஸ், திமுக போன்ற கட்சிகள்தான்.


தாமரை மலர்கிறது
மார் 10, 2025 20:13

பார்ட் டைம் அரசியல்வாதி ராகுல் தொடர்ந்து தோற்று வரும்போதே தெரிகிறது, தேர்தல் கமிஷன் மிக சரியாக செயல்படுகிறது என்று. வாக்காளர்பட்டியல் எல்லாம் சிறப்பாக இருக்கிறது. ஒரு புண்ணாக்கு அட்வைசும் மத்திய அரசுக்கு நீங்கள் சொல்ல தேவை இல்லை. கிளம்புங்க.


Easwar Kamal
மார் 10, 2025 20:08

யாரு இந்த ஓமப்புடி பிர்லா நல்ல ஆள்kitathan புகார் வாசிக்க போயி இருக்குதுங்க இந்த அன்னான் தங்கை கூட்டணி. ரெட்டை குழல் துப்பாக்கி கூட கொஞ்சம் காது கொடுத்து கேக்கும் இவன் தெலுங்கு படத்துல வர வில்லன் நயவஞ்சக சிரிப்பு சிருச்சு ஆளயே தூக்கிருவானே


GMM
மார் 10, 2025 20:04

புதிய வாக்காளர் அட்டை பிறப்பு சான்று, பி. எஸ். என். எல். மொபைல் எண், ஆதார் எண் போன்றவற்றை இணைத்து வங்கி அட்டை போல் வழங்கலாமா ராகுல். இதில் குடிமகன் சான்று எண் இருக்க வேண்டும். வாக்காளர், வேட்பாளர் தகுதி நிர்ணயிக்கலாம். முன்பு போல் ஒரு தேர்தல் ஆணையர் போதும். ஒருவருக்கு ஒரு மொபைல் எண் போல் தேர்தல் ஆணையம் திட்டம் வகுத்தால் ராகுல், மம்தா ஏற்று கொள்வார்களா. ?


முக்கிய வீடியோ