உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வயநாடு நிலச்சரிவு ராகுல் கோரிக்கை

வயநாடு நிலச்சரிவு ராகுல் கோரிக்கை

புதுடில்லி, 'வயநாடு நிலச்சரிவு பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்' என, மத்திய அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கோரிக்கை விடுத்துள்ளார்.காங்கிரஸ் எம்.பி.,யும், எதிர்க்கட்சி தலைவருமான ராகுல். லோக்சபாவில் நேற்று பேசியதாவது: வயநாடு நிலச்சரிவு பாதிப்புகளை நேரில் பார்த்தேன். பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணத் தொகையை, அதிகரித்து வழங்குவதுடன் மீள் உருவாக்கம் செய்ய கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். மேலும் வயநாடு பேரிடரை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி