உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வாட்ஸாப் வாயிலாக சேவைகள் ஆந்திராவில் 200ஐ எட்டியது

வாட்ஸாப் வாயிலாக சேவைகள் ஆந்திராவில் 200ஐ எட்டியது

அமராவதி : 'ஆந்திராவில், 'வாட்ஸாப்' வாயிலாக வழங்கப்படும், 'மனா மித்ரா' திட்டத்தின் கீழ், 200 சேவைகள் வழங்கப்பட்டுள்ளன' என, அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. ஆந்திராவில், சமீபத்தில் மனா மித்ரா என்னும் திட்டம் துவங்கப்பட்டது. அதன்படி, 9552300009 என்ற வாட்ஸாப் எண் அறிமுகப்படுத்தப்பட்டு, அதன் வாயிலாக மாநிலம் முழுதும் அரசின் சேவைகளை பெறலாம் என அறிவிக்கப்பட்டது. தேவையான ஆவணங்களை பெறுதல், கோவில் தரிசனத்துக்கான நேரத்தை தேர்ந்தெடுத்தல், நேரில் செல்லாமலேயே அரசு அலுவலகங்களை தொடர்பு கொள்ளுதல் போன்ற சேவைகள் இதன் வாயிலாக வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மனா மித்ரா திட்டத்தின் வாயிலாக 200 சேவைகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக மாநில தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் நர லோகேஷ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தன் சமூக வலைதள பக்கத்தில், 'இது ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல். மனா மித்ராவின் வாட்ஸாப் நிர்வாக சேவைகள் இப்போது 200ஐ எட்டியுள்ளன, இது, ஆந்திராவில் டிஜிட்டல் நிர்வாகத்தின் சக்தியை காட்டுகிறது. ஆகவே, அனைவரும் இந்த சேவையை பயன்படுத்துங்கள்' என, தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி