உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மக்களின் வரிப்பணம் எங்கு போகிறது? முன்னாள் முதல்வர் எடியூரப்பா கேள்வி

மக்களின் வரிப்பணம் எங்கு போகிறது? முன்னாள் முதல்வர் எடியூரப்பா கேள்வி

விஜயபுரா: ''கர்நாடக காங்கிரஸ் அரசு திவாலாகிவிட்டது. மக்களின் வரிப்பணம் எங்கு போகிறது? மாநிலத்தில் வறட்சி நிலவினாலும், விவசாயிகளின் துயரங்களுக்கு இந்த அரசு பதில் அளிக்காமல், மத்திய அரசை குற்றஞ்சாட்டுகிறது,'' என, பா.ஜ., முன்னாள் முதல்வர் எடியூரப்பா தெரிவித்தார்.விஜயபுரா லோக்சபா தொகுதி பா.ஜ., வேட்பாளர் ரமேஷ் ஜிகஜினகியை ஆதரித்து முத்தேபிகலில் நடந்த பிரசார கூட்டத்தில் எடியூரப்பா பேசியதாவது:நான் முதல்வராக இருந்தபோது, வறட்சி ஏற்பட்டால் முதலில், நம் மாநிலத்தின் பங்கான நிவாரணத்தை பெறுவோம். ஆனால், மாநிலத்தில் உள்ள காங்கிரஸ் அரசு, தனது பங்கை செலவு செய்யாமல், மையத்தையே குற்றஞ்சாட்டுகிறது. இது மாநில அரசு திவாலாகிவிட்டது என்பதற்கான அறிகுறி.மத்திய அரசு, தனது பங்கை மாநிலங்களுக்கு வழங்குகிறது. அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், தற்போது மாநிலத்தில் வறட்சி நிலவுகிறது. விவசாயிகளின் துயரங்களுக்கு பதில் சொல்லாமல், மத்திய அரசு மீது பழி சுமத்தி, மக்களை ஏமாற்றி வருகிறது.லோக்சபா தேர்தலில் எனது மகன் ராகவேந்திரா போட்டியிடுகிறார். 'என் மகன் என் முன்னுரிமை'க்கு முக்கியத்துவம் கொடுக்காமல், நீங்கள் (வாக்காளர்கள்) எனக்கு முக்கியம், அவசியம்.மாநிலத்தில் முதல்கட்ட தேர்தலில் 14 தொகுதிகளிலும் எங்கள் கட்சி வெற்றி பெறும். பா.ஜ., கூட்டணி கட்சியான தேசிய ஜனநாயக கூட்டணி, நாடு முழுதும் 400க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று, நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராவார். கர்நாடகாவில் 28 தொகுதிகளிலும் வெற்றி பெற்று, மோடிக்கு பரிசளிப்போம்.இவ்வாறு அவர் பேசினார்.பா.ஜ., பிரசார கூட்டத்தில் முன்னாள் முதல்வர் எடியூரப்பா பேசினார். இடம்: முத்தேபிகல், விஜயபுரா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ