உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மத்திய அமைச்சரவையில் யார் யாருக்கு என்ன இலாகாக்கள்?: முழு விபரம் இதோ!

மத்திய அமைச்சரவையில் யார் யாருக்கு என்ன இலாகாக்கள்?: முழு விபரம் இதோ!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 3வது முறையாக மோடி பிரதமராக நேற்று பதவியேற்றார். 'மோடி 3.0' அமைச்சரவையில் 71 பேர் பொறுப்பேற்றுள்ளனர். மொத்தம் 30 பேர் கேபினட் அமைச்சர்களாகவும், ஐந்து பேர் தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்களாகவும், 36 பேர் இணை அமைச்சர்களாகவும் பொறுப்பேற்றனர். மோடி உட்பட பா.ஜ.,வை சேர்ந்த 61 பேரும், கூட்டணி கட்சியில் 11 பேரும் அமைச்சர்களாக பதவியேற்றனர்.பிரதமர் மோடி: :பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள்;அணுசக்தித் துறை;விண்வெளித்துறை;அனைத்து முக்கிய கொள்கை விஷயங்கள் மற்றும் எந்த அமைச்சருக்கும் ஒதுக்கப்படாத இதர துறைகள் https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=q9paytb2&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மத்திய அமைச்சர்கள்1) ராஜ்நாத் சிங்- பாதுகாப்புத்துறை2) அமித்ஷா- உள்துறை3) நிதின் கட்கரி- சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை.4) நட்டா- - சுகாதாரத்துறை5) சிவராஜ் சிங் சவுகான்- விவசாயம், ஊரகவளர்ச்சி6) நிர்மலா சீதாராமன்- நிதித்துறை7) ஜெய்சங்கர்- வெளியுறவுத்துறை 8) மனோகர் லால் கட்டார்- வீட்டுவசதி, மின்சாரம்9) குமாரசாமி- கனரக தொழில்துறை10) பியூஷ் கோயல்- வணிகத்துறை11) தர்மேந்திர பிரதான்- கல்வித்துறை, மனித வள மேம்பாடு12) ஜிதன்ராம் மஞ்சி- சிறு, குறு, நடுத்தர தொழில்துறை13) லாலன் சிங்-- பஞ்சாயத்து ராஜ் 14) சர்பானந்த சோனவால்- கப்பல் துறை15) வீரேந்திர குமார்-சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல்16) ராம் மோகன் நாயுடு- சிவில் விமான போக்குவரத்து17) பிரகலாத் ஜோஷி- உணவுத்துறை18) ஜூவல் ஓரம்-பழங்குடியினர் நலத்துறை19) கிரிராஜ் சிங்- ஜவுளித்துறை 20) அஸ்வினி வைஷ்ணவ்- ரயில்வேத்துறை21) ஜோதிராதித்ய சிந்தியா- தொலைதொடர்புத்துறை22) பூபேந்திர யாதவ்-சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் துறை 23) கஜேந்திர சிங் ஷெகாவத்- சுற்றுலாத்துறை24) அன்னபூர்ணா தேவி- மகளிர் மற்றும் குழந்தைகள் நலம்25) கிரண் ரிஜிஜூ- பார்லிமென்ட் விவகாரத்துறை26) ஹர்தீப் சிங் புரி- பெட்ரோலியதுறை27) மன்சுக் மாண்டவியா- தொழிலாளர் நலன், விளையாட்டுத்துறை28) கிஷன் ரெட்டி-நிலக்கரி, சுரங்கம்29) சிராக் பஸ்வான்- விளையாட்டுதுறை30) சி.ஆர்.பாட்டீல்- ஜல்சக்தி*******இணை அமைச்சர்கள்- தனி பொறுப்பு31) இந்திரஜித் சிங்-திட்டம், கலாசாரம்32) ஜிதேந்திர சிங்-பிரதமர் அலுவலகம்33) அர்ஜூன் ராம் மேக்வால்-சட்டம் மற்றும் நீதி34) பிரதாப் ராவ் ஜாதவ்-சுகாதாரம், குடும்ப நலம்35) ஜெயந்த் சவுத்ரி-திறன் மேம்பாட்டுத்துறை************* இணை அமைச்சர்கள்இணை அமைச்சர்கள்36) ஜிதின் பிரசாதா- வர்த்தகம், தொழில். 37) ஸ்ரீபாத் ஏசோ நாயக்- மின்சாரம், மறுசுழற்சி.38) பங்கஜ் சவுத்ரி- நிதித்துறை39) கிருஷண் பால்- கூட்டுறவு40) ராம்தாஸ் அத்வாலே- சமூக நீதி, 41) ராம்நாத் தாக்குர்- வேளாண் மற்றும் விவசாயிகள்நலன்.42) நித்யானந்த் ராய்- உள்துறை, 43) அனுப்ரியா படேல்- சுகாதாரம், குடும்ப நலன். ரசாயனம், உரம்.44) சோமண்ணா- ஜல்சக்தி, மற்றும் ரயில்வே.45) சந்திரசேகர் பெமசானி- ஊரகவளர்ச்சி, தகவல் தொழில்தொடர்பு46) எஸ்.பி.சிங் பகேல்- பஞ்சாயத்துராஜ், மீன்வளம், விலங்குகள் நலம். பால்வளம். 47) ஷோபா கரந்தலாஜே- சிறு,குறு, நடுத்தர மற்றும் தொழிலாளர் , வேலைவாய்ப்பு 48) கீர்த்தி வர்தன் சிங்- வனம் ,சுற்றுச்சூழல், வெளியுறவு49) பி.எல்.வர்மா- நுகர்வோர் விவகாரம் மற்றும் பொது விநியோகம்.50) சாந்தனு தாக்குர்- கப்பல்த்துறை51) சுரேஷ் கோபி- சுற்றுலா, மற்றும் பெட்ரோலியம்52) எல். முருகன்- தகவல் ஒலிபரப்பு மற்றும் பார்லிமென்ட் விவகாரம்53)அஜய் தம்டா- இணை அமைச்சர் ( போக்குவரத்து - நெஞ்சாலை )54) பந்தி சஞ்சய் குமார்- உள்துறை55) கமலேஷ் பாஸ்வான்- ஊரக வளர்ச்சி56) பாகிரத் சவுத்ரி- வேளாண்த்துறை57) சதீஷ் சந்திர துபே- நிலக்கரி, சுரங்கம்.58)சஞ்சய் சேத்- பாதுகாப்பு59) ரவ்னீத் சிங்- ரயில்வே60) துர்கா தாஸ் உக்கே- பழங்குடியினர்61) ரக்ஷா நிகில் கட்சே- விளையாட்டுத்துறை62) சுகந்த மஜும்தார்- கல்வித்துறை63) சாவித்ரி தாக்குர்- மகளிர் மற்றும் குழந்தைகள் நலம்64) தோகன் சாஹு- வீட்டுவசதி்த்துறை 64) ராஜ் பூஷண் சவுத்ரி- ஜல்சக்தி.65) பூபதி ராஜு ஸ்ரீநிவாஸ் வர்மா- கனரக தொழில்துறை 66) ஹர்ஷ் மல்ஹோத்ரா- (இணை அமைச்சர் (போக்குவரத்து நெடுஞ்சாலை )67) நிமுபென் பாமனியா- நுகர்வோர்த்துறை68) முரளிதர் மொகுல்- கூட்டுறவு70) ஜார்ஜ் குரியன்- சிறுபான்மை துறை71) பவித்ர மார்கரிட்டா- வெளியுறவுத்துறை

முக்கிய துறைகளில் மாற்றம் இல்லை

கடந்த முறை முக்கிய துறைகளில் இருந்த கேபினட் அமைச்சர்களுக்கு மீண்டும் அதே இலாக்காக்கள் கொடுக்கப்பட்பட்டுள்ளன.

பதவி இழந்த முன்னாள் அமைச்சர்கள்

நரேந்திர சிங் தோமர், அர்ஜூன் முண்டா ஸ்மிருதி இரானி, முக்தார் அப்பாஸ் நக்வி, பசுபதி குமார் பராஸ், அனுராக் சிங் தாக்கூர்.

இலாகா மாறிய மத்திய அமைச்சர்கள்

2019 ல் ஜோதிராதித்யா சிந்தியாவிற்கு சிவில் விமான போக்குவரத்துறை ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது தொலை தொடர்பு துறை ஒதுக்கப்பட்டுள்ளது.கஜேந்திர சிங் ஷெகாவத்திற்கு கடந்த முறை ஜல்சக்தி துறை ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது சுற்றுலாதுறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.கிரண் ரிஜிஜூக்கு கடந்த முறை சட்டம் மற்றும் நீதித்துறை ஒதுக்கப்பட்டிருந்தது தற்போது பார்லிமென்ட் விவகாரம் ஒதுக்கப்பட்டுள்ளது.மன்சுக் மாண்டவியாவுக்கு கடந்த முறை சுகாதாரம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. தற்போது தொழிலாளர் நலத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

S.jayaram
ஜூன் 10, 2024 22:42

பார்ப்போம் இந்த நிர்வாகம் எப்படி செயல்படுகிறது என்று


RAJ
ஜூன் 10, 2024 22:25

Best Minister at all time is Dr. Jaishankar.


A P
ஜூன் 10, 2024 21:47

நல்லவர் மோதி மீது பொறுப்பில்லாமல் வன்மம் பொழியும் சிலர் இந்தியக் குடிமகனாக இருக்கையில், இது ஒன்றும் தப்பல்ல.


Bhaskaran
ஜூன் 10, 2024 21:05

இதே நிதி அமைச்சர் இன்னும் தொடரவேண்டுமா


ஆரூர் ரங்
ஜூன் 11, 2024 11:35

பெருந்தொற்று நெருக்கடி காலத்தில் வேறொருவர் நிதியமைச்சராக இருந்திருந்தால் ராஜினாமா செய்துவிட்டு ஓடியிருப்பார். அரசுக்கும் வரிவருவாய் இல்லாமல் மக்களினா வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்ட நிலையில் திருமதி நிர்மலா (உலகிலேயே) சிறப்பாக செயல்பட்டார். உலகமே இன்னும் தத்தளிக்கும் நேரத்தில் நாம் இரண்டே ஆண்டுகளில் மீண்டுவிட்டோம். நமது வளர்ச்சியை உலக வங்கி, IMF மற்றும் ரேட்டிங் நிறுவனங்கள் எல்லாமே பாராட்டுகின்றன.


Ashanmugam
ஜூன் 10, 2024 20:16

இரண்டு மண் குதிரைகளை நம்பி பிஜேபி ஆட்சிக்கு அமர்ந்திருக்கிறது. எந்த நேரத்தில் எப்படி ஆற்றில் முழ்கப்போவது ஸ்ரீராமபிரானுக்குதான் வெளிச்சம். இனி இந்தியாவில் பிஜேபி ஒருக்காலும் கறுப்பு பணத்தை வெளியே கொண்டு வர முடியாது. மேலும், ஐடி, அமலாக்கத்துறை ஏவுதல் செய்யமுடியாது. ஏனெனில், கூட்டணியில் முக்கியமாக அங்கம் வகிக்கும் இரண்டு கட்சி தலைவர்கள் ஊழலுக்கும் லஞ்சம் லாவண்ணியத்திற்கு துணை போனவர்கள். அதாவது ஊழல் குற்றச்சாற்றில் ஜெயிலுக்கு போய் ஆந்திரா முதல்வரான சந்திரபாபு நாயுடு, பதவி வெறிபிடித்த பச்சோந்தி நிதிஷ்குமார் ஆவர். இவர்கள் இரண்டுபேரும் பிஜேபிஐ ஒழுங்காக ஆட்சி நடத்த விடமாட்டார்கள். இவர்கள் இருவரும் உதட்டில் உரையாடுபவர்கள். ஆனால் உள்ளத்தில் "இந்தியா" கூட்டணியை எப்படியாவது ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்ற குறிக்கோலோடு இன்று பிஜேபியில் ஐக்கியமாகி உள்ளனர். இதனால் பிஜேபி ஐந்து வருடம் நிரந்தரமாக ஆட்சி புரிவது கடினம். இனி ஊழல்வாதிகளுக்கு இந்தியாவில், இந்திய கூட்டணியில் உள்ளவங்களுக்கு கொண்டாட்டம்.


Chandramoulli N
ஜூன் 10, 2024 21:50

it is none of your business BJP will complete 5 years term fully. coming days are very dangerous for DMK. so many ministers r nervous and at anytime they may face the trial


T.Gajendran
ஜூன் 10, 2024 22:24

என்னா?? அண்ணே இப்படி, சொல்லிடீங்க,??, பிஜேபியில், இருக்கிறவர்கள், எல்லாமே, கறைபடியாத, கறங்களா?? அப்போ, ஊழல் கறைபடிந்த, நாயுடுவும், நிதிஷும், அவர்களின், ஆதரவும்,எதற்காக, வெளியே, துரத்தவேண்டியது, தானே, பிஜேபி, அப்படி செய்யாது, ஏன் என்றால், மொத்த, பிஜேபியும், பதவி வெறி, பிடித்த, பித்தனுங்க, ஆட்சியும், பதவியும், இல்லாமல், அவர்களல், ஒரு நாள் கூட நிம்மதியாக, இருக்க முடியாது, அண்ணே? ஊழலை விட பயங்கர, மோசம், அதிகாரம், பதவி, சுயநலம்,


தரணிகுமார்
ஜூன் 10, 2024 19:42

ஆஹா ... பொறுப்பே இல்லாம நிறைய அமைச்சர்கள் இருக்காங்களே...


V Venkatachalam, Chennai- 87
ஜூன் 11, 2024 07:34

தரணி குமாரு... தமிழ் நாட்டுல, திராவிட மூடல் அரசுல, ஜெயிலில் இருக்குற ஒருத்தன் மந்திரி பதவியில சம்பளத்தையும் வாங்கி கொண்டு இருக்கான்.. முதலில் உன் லட்சணத்த பார். அப்பறம் திராவிட மூடல் அரசுக்கு ஜே போடலாம்..


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை