உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேர்தல் தேதி அறிவித்த உடனேயே கெஜ்ரிவாலை கைது செய்தது ஏன்?: ஆம்ஆத்மி கேள்வி

தேர்தல் தேதி அறிவித்த உடனேயே கெஜ்ரிவாலை கைது செய்தது ஏன்?: ஆம்ஆத்மி கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: தேர்தல் தேதி அறிவித்த உடனேயே கெஜ்ரிவாலை கைது செய்தது ஏன்? என ஆம்ஆத்மி அமைச்சர் அதிஷி கேள்வி எழுப்பி உள்ளார். இது குறித்து அதிஷி நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது: டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை ஒரு போலி வழக்கில் சிக்க வைத்து, அமலாக்கத்துறையை பயன்படுத்தி பா.ஜ., சிறையில் அடைத்துள்ளது. தேர்தல் தேதி அறிவித்த உடனேயே கெஜ்ரிவாலை கைது செய்தது ஏன்?. ஏனென்றால் பிரதமர் மோடிக்கு எதிராக கெஜ்ரிவாலால் சவால் விட முடியும்.ஹோலி ஒரு பண்டிகை மட்டுமல்ல, தீமைக்கு எதிரான நன்மையின் வெற்றியின் சின்னம். ஆம் ஆத்மி கட்சியின் ஒவ்வொரு தலைவரும் அநீதிக்கு எதிராக இரவும், பகலும் போராடி வருகின்றனர். இந்த ஆண்டு, நாங்கள் வண்ணங்களுடன் விளையாட மாட்டோம், ஹோலி பண்டிகை கொண்டாட மாட்டோம். ஜனநாயகத்தை காப்பாற்ற தீமைக்கு எதிராக ஆம்ஆத்மி கட்சி போராட்டம் நடத்தி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

பாரதி
மார் 26, 2024 09:21

நீங்க கொள்ளை அடிச்சது ஏன் என்று இன்னமும் சொல்லலையே


கண்ணா
மார் 25, 2024 21:59

ஏன்?. 9 முறை சம்மன் அனுப்பினார்கள். ஏன் போக வில்லை


Devan
மார் 25, 2024 21:41

முதலில் சம்மனை மதித்து E D அலுவலகத்திற்கு சென்று இருந்தால் அப்போதே கைது செய்திருக்கலாம் இப்போது தான் கைது செய்ய ஒத்துழைத்து உங்களை இது போல் பேச வைத்திருக்கிறார்


Suppan
மார் 25, 2024 21:22

This Liquorgate issue is going on for more than years Kejriwal dodged summonses of ED despite directions by the court Even CM has to obey the court order He defied and now face the music Just because election process has started, does it mean that these corrupt politicians cannot be arrested?


பேசும் தமிழன்
மார் 25, 2024 20:28

அவருக்கு அத்தனை முறை சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்தது ஏன்..... அதற்க்கு முதலில் பதில் சொல்லுங்கள்.


Krishnamurthy Venkatesan
மார் 25, 2024 19:22

SHE SHOULD ASK MR KEJRIWAL WHY HE HAS NOT RESPONDED TO edS NUMEROUS SUMMONS


N SASIKUMAR YADHAV
மார் 25, 2024 19:14

முதல் சம்மனுக்கு சரண்டராகியிருந்தால் அவர்கள் எதற்காக கைதுசெய்ய போகிறார்கள் எட்டு சம்மன் அனுப்பியும் சரண்டராகவில்லை அதனால்தான் உச்சநீதிமன்ற உத்தரவுபடி கைதுசெய்திருக்கிறது தேசதுரோகியை அமலாக்கத்துறை


R Kay
மார் 25, 2024 18:57

சம்மன் அனுப்பியதும் திருடனுக்கு தேள் கொட்டியது போல புறக்கணித்ததால் தானே இந்த கதி


surya krishna
மார் 25, 2024 18:42

9 சம்மன் கொடுத்து ஆஜர் ஆகாததது ஏன்? தேர்தலை ஒட்டி கைது செய்தால் அனுதாபம் தேடி கொள்ளத்தானே... போர்ஜெரி கெஜ்ரி...


krishnamurthy
மார் 25, 2024 18:17

if it is false why he withdrew case then why not fight in court


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை