மேலும் செய்திகள்
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
5 hour(s) ago | 5
மேற்குவங்கத்தில் சோகம்: நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலி
5 hour(s) ago | 1
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
8 hour(s) ago | 13
பெங்களூரு : ''காங்கிரஸ் தேசிய தலைவரான மல்லிகார்ஜுன கார்கே, நாடு முழுதும் பிரசாரம் செய்ய வேண்டியுள்ளதால், என்னை களமிறங்கும்படி ஆலோசனை கூறினார்,'' என, அவரது மருமகனும், கலபுரகிகாங்கிரஸ் வேட்பாளருமான ராதா கிருஷ்ணா தொட்டமணி தெரிவித்தார்.கலபுரகியில் நேற்று அவர் கூறியதாவது: நான் முதல் முறையாக தேர்தலில் போட்டியிட்டாலும், எனக்கு அரசியல் புதிதல்ல. 20 ஆண்டுகளாக என் மாமனாருக்காக, தேர்தலில் பணியாற்றினேன். எனக்கு தேர்தலை பற்றி தெரியும். நான் தேர்தலில் போட்டியிடுவேன் என, கனவிலும் நினைக்கவில்லை.காங்கிரஸ் தேசிய தலைவரான மல்லிகார்ஜுன கார்கே, நாடு முழுதும் பிரசாரம் செய்ய வேண்டியுள்ளதால், என்னை களமிறங்கும்படி ஆலோசனை கூறினார். என் மாமனார், மாமியார், மருமகன் பிரியங்க் கார்கே ஆசியுடன் போட்டியிடுகிறேன். வாக்காளர்களிடம் எனக்கு, நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஐந்து வாக்குறுதித் திட்டங்களை செயல்படுத்திய காங்கிரஸ் அரசுக்கு, மக்கள் நன்றி தெரிவிக்கின்றனர். நான் செல்லும் இடங்களில், இது பற்றி கூறுகின்றனர்.கலபுரகி வளர்ச்சிக்காக, என்னிடம் பல திட்டங்கள் உள்ளன. அனைத்து சட்டசபை தொகுதிகளுக்கும் திட்டங்கள் வகுத்துள்ளேன். மக்களிடம் விரைவில் விவரிப்பேன். வெற்றி என்னுடையதே.இம்முறை நடக்கும் லோக்சபா தேர்தல் பொறுப்பான கட்சிக்கும், எந்த பணிகளையும் செய்யாத மத்திய அரசுக்கும் இடையே நடக்கும் தேர்தலாகும்.இவ்வாறு அவர் கூறினார்.
5 hour(s) ago | 5
5 hour(s) ago | 1
8 hour(s) ago | 13