உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 58 ஆண்டுகள் ஆட்சி காலத்தில் தானியங்கி ரயில் பாதுகாப்பு முறையினை காங்கிரஸ் ஏன் செயல்படுத்தவில்லை

58 ஆண்டுகள் ஆட்சி காலத்தில் தானியங்கி ரயில் பாதுகாப்பு முறையினை காங்கிரஸ் ஏன் செயல்படுத்தவில்லை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ரயில் விபத்துகள் குறித்து பார்லிமென்ட் கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பிக்கள் எழுப்பிய கேள்விகளுக்கு 58 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது தானியங்கி ரயில் பாதுகாப்பு திட்டத்தை ஏன் செயல்படுத்தவில்லை என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கேள்வி எழுப்பினார். வியாழன்று நடந்த பார்லிமென்ட் கூட்டத்தில் ரயில் பாதுகாப்பு குறித்து காங்கிரஸ் எம்.பிக்கள் கேட்ட கேள்விகளுக்கு மத்திய ரயிலவே அமைச்சர் மேலும் கூறியதாவது, ‛ ஜெர்மனி, பிரான்ஸ், பெல்ஜியம் போன்ற சிறிய நாடுகளில் 1970 மற்றும் 1980 காலகட்டத்தில் தானியங்கி ரயில்வே பாதுகாப்பினை செயல்படுத்தி வந்தனர்.ஆனால், இந்தியாவில் 2014 ஆண்டு வரை அந்த தானியங்கி பாதுகாப்பு முறை நடைமுறைக்கு வரவில்லை. 58 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் ஒரு கி.மீ., தூரத்திற்கு கூட ரயில்வே தானியங்கி பாதுகாப்பு நடைமுறைக்கு வரவில்லை' 2006ல் நடைமுறைக்கு வந்த ரயில்வே மோதல் தடுப்பு முறை தோல்வி அடைந்ததால் அது கைவிடப்பட்டது. பிரதமர் மோடி பொறுப்பேற்ற காலம் முதல் இந்தியாவில் ரயில் விபத்துகள் பெருமளவு குறைந்துள்ளது. . இன்னும் 20 ஆண்டுகளில் நாடு முழுவதும் தானியங்கி ரயில்வே பாதுகாப்பு முறை நடைமுறைப்படுத்தப்படும்' இவ்வாறு அமைச்சர் மேலும் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 37 )

Sahai Pratheep
ஆக 04, 2024 20:40

அப்போ இவ்வளவு விபத்துக்கள் இல்லை.தற்போது ரயில் அமைச்சகம் இல்லை வருடா வருடம் ரயில்வேக்கு ஒதுக்கும் நிதியும் குறையும்போது,தண்டவாளங்கள் பராமரிப்பு சரியில்லாத காரணத்தால் விபத்துக்கள் நேரிடுகிறது


Selvin Christopher
ஆக 02, 2024 18:09

Fool theirs no technical and Money at the time


முருகன்
ஆக 02, 2024 13:52

பத்து வருடம் உங்கள் புதிய இந்தியாவில் ஏன் செய்ய வில்லை இன்னும் காங்கிரஸை குறை கூறுவது ஏன்


Kumar Kumar
ஆக 02, 2024 14:42

YOU HAVE A EXCELLANT KNOWLEDGE.


Barakat Ali
ஆக 02, 2024 13:32

அது மட்டும் அல்ல... யுத்த தளவாடங்கள், ஆயுதங்கள், நவீன போர்க்கருவிகள், நவீன ரேடார்கள், போர்விமானங்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் ஆகப்பலவற்றை பாஜக அரசுதான் வாங்கி வருகிறது .. பத்தாண்டுகளாக இவை இறக்குமதி செய்யப்பட அதிக செலவு செய்துள்ளோம். காங்கிரஸ் அரசுகள் இதில் கொள்ளையடித்ததோடு சரி.. இப்பொழுது த மா கா தலைவராக உள்ள ஜி கே வாசன் கார்கில் போர் சமயத்தில் "போபர்ஸ் பீரங்கி பேரத்தில் ஊழலே நடக்கவில்லை என்று அந்த பீரங்கிகள் நன்கு வேலை செய்வதை வைத்தே புரிந்து கொள்ளலாம்" என்று திருவாய் மலர்ந்தருளினார் .....


Swaminathan L
ஆக 02, 2024 13:02

இந்த விஷயத்தில் என்னுடைய விமரிசனம், கொஞ்சம் தொழில்நுட்பத் தகவல்கள் கலந்தது, இரண்டு முறை முயன்றும் பதிவேற்ற முடியவில்லை. ஆகையால், ஒரு ஸம்மரி போன்று சொல்கிறேன். கவச் இரயில் விபத்து தடுப்பு சிஸ்டம் பல்வேறு மாறுபட்ட தொழில்நுட்பங்களைக் கொண்டது. தண்டவாளங்களிலும், இரயில் என்ஜின்களிலும், இண்டர்லாக்கிங் சிஸ்டங்களிலும், ஸ்டேஷன் கண்ட்ரோல் சிஸ்டங்களிலும், ஸ்டேஷன் மாஸ்டர், என்ஜின் டிரைவர்கள், கார்டுகள் என்று பலரிடமும் பதிய சாதனங்கள், தானியங்கி அமைப்புகள், உபயோகத்தில் உள்ள அமைப்புகளில் பெரும் மேம்பாடுகள் என்று செய்து நிறுவப்பட வேண்டிய பாதுகாப்பு அமைப்பு அது. 2011ஆம் ஆண்டு துவங்கி பத்தாண்டுகள் கடந்து இந்திய இரயில்வேயின் ஆர்டிஎஸ்ஓ, லக்னோ மையம் மற்றும் பல இந்திய, வெளிநாட்டு நிறுவனம் பொறியாளர்கள் பல முறை அமர்ந்து விவாதித்து செம்மைப்படுத்திய தொழில்நுட்பங்கள் சேர்த்த சிஸ்டம் அது. பல்லாயிரம் கோடி ரூபாய் மட்டுமல்ல, சில பத்தாண்டுகளாவது தேவை இந்த அமைப்பை நாடு முழுவதும் நிறுவ. வருடத்துக்கு சில ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் மட்டுமே இந்த சிஸ்டத்தை நிறுவ முடிகிறது மேற்கூறிய காரணங்களால்.


es
ஆக 02, 2024 12:46

so what were u doing sir for ten years? stop blaming others ppl are tired of these lies


hari
ஆக 02, 2024 13:35

why es from Pakistan crying for India.... no tasmac there Es?


Thirunavukkarasu Sivasubramaniam
ஆக 02, 2024 12:36

கவச தொழில் நுட்ப நிர்மாண செலவு ஒரு கிலோமிட்டருக்கு ஐம்பது லட்ச ரூபாய். நாட்டின் மொத்த ரயில்வே கிலோமீட்டர்: 63456 கி,மீ. இதற்க்கு ஆகும் செலவு சுமார் 32000 கோடி ரூபாய். இதை ஒரே ஆண்டில் செயல் படுத்தினால் அதிமாக வரி வசூலிக்க வேண்டும். பட்ஜெட்டும் கரெக்டா போடணும். வரியிலும் சலுகை வேண்டும். எனவே இதை படிப்படியாகத்தான் நிறைவேற்ற முடியும். இதுதான் நிதர்ஷனம்.


RAMAKRISHNAN NATESAN
ஆக 02, 2024 11:30

எத்தனை வருடங்கள் காங்கிரசை குறை கூறி காலம் கடத்துவீர்கள் என்று திமுக வின் கொத்தடிமைகள் கேட்பதுதான் வியப்பு.... ஏனென்றால் திமுகவும் தமிழகத்தில் அதிமுக அரசுகளைக் குறை சொல்லித்தான் பிழைப்பை ஓட்டுகிறது .....


Raj Kamal
ஆக 02, 2024 11:24

அடடா எப்படியாப்பட்ட அறிவார்ந்த பேச்சு? இதுக்கு பருத்தி மூட்ட குடோன்லயே இருந்திருக்கலாமே? அப்புறோம் எதுக்கு பிஜேபி?


RAMAKRISHNAN NATESAN
ஆக 02, 2024 11:19

Automatic train protection ATP.. திமுக காங்கிரஸ் அடிமைகளுக்கு இதைப்பற்றிய புரிதல் இல்லை. சீக்கு பிடித்த மூளைகள்... அவர்களுக்கு பதில் கொடுக்கும் சங்கிகளுக்கும் புரிதல் இல்லை .... இந்தத் தொழில் நுட்பம் ராஜீவ் காலத்துக்கு முன்பே, இந்திரா காலத்திலேயே வந்துவிட்டது.. முன்னேறிய நாடுகளே இதை படிப்படியாகத்தான் செயல்படுத்தின என்பதை ஒப்புக்கொள்கிறோம் ...... ராஜீவாவது செய்திருக்கலாம் .... ஆனால் அதைச் செயல்படுத்த ஆர்வம் காட்டவில்லை அப்போது .... இந்தத் தொழில் நுட்பத்துக்கு மாறுவது ஜீபூம்பா வேலை அல்ல ......... காரணம் ராஜீவ் காலந்தொட்டு பட்ஜெட் டில் தொழில்நுட்பத்துக்கு நிதி அதிகம் ஒதுக்கப்பட்டது. ரயில்வேயிலும் ஊழியர்கள் சர்ப்ளஸ்.. அவர் செய்திருக்கலாம் என்று பாஜக குற்றம் சுமத்துவது நியாயமே.. காங்கிரசின் அசிங்கமான பழக்கம் நற்பெயர் என்றால் ஓடிவந்து முன்னே நிற்பார்கள்.. களங்கம் என்றால் பாஜகவின் மீது கைகாட்டுவார்கள் .....


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை