உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பா.ஜ.,வை ஆதரித்தது ஏன்? சந்திரசேகர ராவ் விளக்கம்

பா.ஜ.,வை ஆதரித்தது ஏன்? சந்திரசேகர ராவ் விளக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மத்திய அரசுடன் அரசியல் சாசன ரீதியில் உறவை பேண வேண்டும் என்பதற்காக தான் கடந்த காலங்களில் பா.ஜ.,வை ஆதரித்தோம் என பிஆர்எஸ் கட்சி தலைவரும், தெலுங்கானா முன்னாள் முதல்வருமான சந்திரசேகர ராவ் கூறியுள்ளார்.இது தொடர்பாக ஆங்கில டிவி சேனலுக்கு அவர் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது: தெலுங்கானாவில் முதலில் நாங்கள் தான் ஆட்சி அமைத்தோம். இதனால், மத்திய அரசுடன் அரசியல் சாசன ரீதியில் உறவை பேண வேண்டியிருந்தது. இதனால், கடந்த காலங்களில் ஜனாதிபதி தேர்தலின் போது பா.ஜ., எங்களின் ஆதரவை கேட்டது. நாங்களும் ஆதரித்தோம். தெலுங்கானாவில் களத்தில் பா.ஜ., எங்கும் காணப்படவில்லை. அக்கட்சி பொய் வாக்குறுதிகளை அளித்து வருகிறது. வரும் தேர்தலில் ஒரு தொகுதியில் கூட தெலுங்கானாவில் அக்கட்சி வெற்றி பெறாது. இவ்வாறு அவர் கூறினார்.மற்றொரு ஆங்கில டிவிக்கு அளித்த பேட்டியில், சந்திரசேகர ராவ் கூறியதாவது: தற்போது நான் உங்களுக்கு கூறுவது ஆச்சர்யமாக இருக்கும். மாநில கட்சிகள் வலுவாகி வருகின்றன. ஒரு சக்தியாக அக்கட்சிகள் உருவெடுத்துள்ளன. அக்கட்சிகள் தேஜ கூட்டணியையோ, ‛ இண்டியா' கூட்டணியையோ ஆதரிக்க போவதில்லை. மாறாக இவ்விரு கூட்டணி தான் மாநில கட்சிகளை ஆதரிக்க போகின்றது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

venugopal s
மே 11, 2024 17:20

நமக்கு இந்த திஹார் ஜெயில் களி ஒத்துக் கொள்ளாது


Syed ghouse basha
மே 11, 2024 15:52

தோல்விக்கு பின் ஞானோதயம்


Lion Drsekar
மே 11, 2024 14:26

பாவம் இவர் தனக்காக ஒரு மாநிலத்தையே உருவாக்கி குறுநில மன்னரானார் விதி விளையாடிவிட்டது மாமன்னர்கள் டெல்லியில் படை எடுப்பதுபோல் ஐவரும் ஆகிவிட்டார் நல்லதே நடக்கட்டும், வாழ்க இவ்வையகம் , வந்தே மாதரம்


S. Gopalakrishnan
மே 11, 2024 14:03

உளறல் ...


C.SRIRAM
மே 11, 2024 14:00

உறவை பேணி கிழிச்சதெல்லாம் நன்கு நினைவில் உள்ளது என்னமா புளுகுகிறார் இந்த அரசியல் வியாதியின் மகள் திஹார் சிறையில் மேலும் மாநிலத்தில் எதிர்க்கட்சி அது தான் இந்த நடிப்பு


குமரி குருவி
மே 11, 2024 13:57

தேசம் நலம் பெற தேசம் வளர பெற பா.ஜ.க.தான் வேண்டும்...


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை