உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜம்மு பயங்கரவாத தாக்குதல்களை பிரதமர் மோடி கண்டிக்காதது ஏன்?

ஜம்மு பயங்கரவாத தாக்குதல்களை பிரதமர் மோடி கண்டிக்காதது ஏன்?

புதுடில்லி, 'ஜம்மு - காஷ்மீரில் கடந்த மூன்று நாட்களில், பயங்கரவாதிகள் மூன்று முறை தாக்குதல் நடத்திய நிலையில், அது குறித்து பிரதமர் மோடி கண்டிக்காமல் மவுனம் காப்பது ஏன்?' என, காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. இது குறித்து அக்கட்சியின் எம்.பி., ராகுல் தன் சமூக வலைதள பக்கத்தில், 'பா.ஜ., ஆட்சியில் நாட்டிற்கு எதிராக சதித் திட்டம் தீட்டுபவர்கள் ஏன் பிடிபடவில்லை என்பதற்கு நாடு பதில் சொல்ல வேண்டும்.'வாழ்த்து செய்திகளுக்கு பதிலளிப்பதில் மும்முரமாக உள்ள பிரதமரால், ஜம்மு - காஷ்மீரில் கொடூரமாகக் கொல்லப்பட்ட பக்தர்களின் குடும்பத்தாரின் அழுகையைக் கூட கேட்க முடியாது. 'ரியாசி, கதுவா, தோடா ஆகிய மாவட்டங்களில் கடந்த மூன்று நாட்களில், மூன்று வெவ்வேறு பயங்கரவாத சம்பவங்கள் நடந்துள்ளன. ஆனால், பிரதமர் இன்னும் கொண்டாடுவதில் மும்முரமாக உள்ளார்' என விமர்சித்துள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவரும், ஊடக பொறுப்பாளருமான பவன் கேரா கூறியதாவது:காஷ்மீர் விஷயத்தில் பா.ஜ., அரசு மோசமான தோல்வியை எதிர்கொண்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில், மோடி அரசு தேசிய பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி உள்ளது.கோழைத்தனமான பயங்கரவாத தாக்குதல்களின் விளைவுகளை அப்பாவிகள் அனுபவிக்கின்றனர். ஆனால் அதைப் பற்றி கவலைப்படாத அக்கட்சியின் அரசியல் வணிகம் தொடர்கிறது. பாகிஸ்தான் தலைவர்களின் வாழ்த்துகளுக்கு பதிலளிக்கும் பணியில் பிரதமர் மோடி பிஸியாக இருக்கிறார். கொடூரமான பயங்கரவாத தாக்குதல்கள் குறித்து அவர் ஏன் ஒரு வார்த்தை கூட பேசவில்லை? ஏன் மவுனம் காக்கிறார்.பா.ஜ., ஆட்சிக்காலத்தில் ஜம்மு - காஷ்மீரில் 2,262 பயங்கரவாத தாக்குதல்களில் 363 பொதுமக்கள் இறந்ததுடன், 596 வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். எனினும் மோடி அரசு, தேச பாதுகாப்பிற்கான ஆபத்தை பொருட்படுத்துவதாக தெரியவில்லை. ஜம்மு - காஷ்மீரில் அமைதி மற்றும் இயல்பு நிலை திரும்பும் என்ற பா.ஜ.,வின் வெற்று வாதங்கள், கடந்த சில தினங்களாக அப்பகுதியில் நடந்துவரும் பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களால் முழுமையாக அம்பலப்படுத்தப்பட்டுள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

kulandai kannan
ஜூன் 13, 2024 16:44

1990ல் காங்கிரஸ் தோற்று வி.பி.சிங் ஆட்சி வந்த உடனே காஷ்மீர் பிரச்னை வெடித்து காஷ்மீர் பண்டிட்கள் அகதிகளாயினர்.2024ல் காங்கிரஸ் தோற்றவுடன் மீண்டும் காஷ்மீர் பிரச்னை தீவிரமடைகிறது.


Srprd
ஜூன் 13, 2024 13:08

They are correct in this.


saravanan
ஜூன் 13, 2024 11:06

காங்கிரஸ் முதலை கண்ணீர் வடிக்கவேண்டாம். ஜம்மு காஷ்மீரில் பிரிவினை விதை போட்டதே காங்கிரெஸ்த்தானே. விதை விதைத்து தண்ணீர் விட்டு வளர்ப்பதும் காங்கிரஸ். இந்திய மக்களுக்கு தெரியும்.


Shekar
ஜூன் 13, 2024 09:40

சரிதானே, நம் வீரர்களின் தலையை பாகிஸ்தானியர்கள் வெட்டி எடுத்துச்சென்றபோதும், மும்பை தாக்குதல்போதும் எங்கள் எம் எம் எஸ் எவ்வளவு வன்மையாய் கண்டிச்சி அமைதிகாத்தார். இல்லையினா அன்னைக்கே பாகிஸ்தான் நம்ம தலையில அணுகுண்டை போட்டிருப்பான். காங்கிரஸ்கரங்க நாங்க கண்டிக்க மட்டும்தான் செய்வோம். திடீர்ன்னு அவன் ஊர்ல புகுந்து அடிக்கமாட்டோம், அணுகுண்டு வச்சிருக்கறதால சலாம் போட்டு மரியாதைகொடுப்போம், எங்ககிட்ட அணு ஆயுதம் இருந்தாலும் அதை கண்டுக்கமாட்டோம்.


ஆரூர் ரங்
ஜூன் 13, 2024 09:12

மும்பைத் தாக்குதலுக்கு எவ்விதமான பதிலடியும் கொடுக்க பயந்த காங்கிரஸ் இக்கேள்வியைக் கேட்பது அபத்தம். பதிலடி கொடுத்து செய்கை மூலம் பாடம் கற்பிப்பது மோதி ஸ்டைல்.


RAMAKRISHNAN NATESAN
ஜூன் 13, 2024 09:11

அதானே ... காங்கிரஸ் சரியான கேள்வி கேட்டுள்ளது ... மன் மோகன் ஆட்சிக்காலத்தில் இப்படி நடந்தால் கவலையளிக்கிறது, வருத்தமளிக்கிறது, வேதனையளிக்கிறது, துக்கமளிக்கிறது ன்னு மாத்தி மாத்தி சொல்லிக்கிட்டே இருப்பாரு.. இவரு என்னடான்னா துல்லியத்தாக்குதல் அது இது ன்னு காலநேரம் பார்த்து நடத்திடுறாரே. நமக்கு பிரியமான பாகிஸ்தானுக்கு தொல்லை கொடுக்குறதுதான் இவரு வேலை .....


Yuvaraj Velumani
ஜூன் 13, 2024 08:26

திருட்டு கான்சர் கிராஸ் நீங்க தா தீவிரவாதிகளுக்கு துணை போயி நாட்டை காட்டி கொடுக்கும் கும்பல்


பேசும் தமிழன்
ஜூன் 13, 2024 07:36

அவர் கண்டிக்கும் ஆள் கிடையாது.... தக்க பதிலடி கொடுக்கும் ஆள்.... கான் கிராஸ் கட்சி ஆட்சியில் இருந்த போது பாகிஸ்தான் தீவிரவாதிகள் நமது ராணுவ வீரனின் தலையை வெட்டி எடுத்து சென்ற போது கூட.... தக்க கொடுக்காமல் அமைதி காத்தனர்..... அவர்கள் எல்லாம் வாயே திறக்க கூடாது.


ராமகிருஷ்ணன்
ஜூன் 13, 2024 07:35

காங்கிரஸ்காரர்களின் உத்தரவு படி தானே தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். விசாரித்து தண்டனை தர வேண்டும் என்றால் உங்களுக்கு தான் தண்டனை தரவேண்டும். எப்படியாவது மத கலவரம் செய்து மோடி ஆட்சிக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தி காங்கிரஸ் ஓட்டு வங்கியை உயர்ந்த நினைக்கும் உங்கள் ஈனத்தனமான மத அரசியல் இனிமே வெற்றி பெறாது.


vadivelu
ஜூன் 13, 2024 06:10

ஏன்னென்றால் மொத்தமாக ஒரே போடு போடத்தான்.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை