உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மன்னர்களை அவமதிக்கும் ராகுல் முகலாயர்களை பற்றி பேசாதது ஏன்?

மன்னர்களை அவமதிக்கும் ராகுல் முகலாயர்களை பற்றி பேசாதது ஏன்?

பெலகாவி : ''நம் நாட்டை ஆண்ட மன்னர்கள், பேரரசர்களை அவமதிக்கும் காங்கிரஸ் இளவரசர் ராகுல், தாஜா செய்யும் ஓட்டு வங்கி அரசியலுக்காக நவாப்கள், நிஜாம்கள், சுல்தான்கள், பாட்ஷாக்கள் செய்த அட்டூழியங்கள் குறித்து வாய் திறக்க மறுக்கிறார்,'' என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். கர்நாடகாவில், மொத்தம் 28 லோக்சபா தொகுதி கள் உள்ளன. முதல் கட்டமாக, 14 தொகுதிகளுக்கு கடந்த 26ம் தேதி ஓட்டுப்பதிவு நடந்தது. மீதியுள்ள 14 தொகுதிகளுக்கு, மே 7ம் தேதி ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது. இந்த தொகுதிகளுக்கான பிரசாரம் அனல் பறக்கிறது.

பேச மறுப்பது ஏன்?

நேற்று ஒரே நாளில், பிரதமர் மோடி நான்கு இடங்களில், எட்டு தொகுதிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக நடந்த பொது கூட்டங்களில் பங்கேற்று பேசினார்.பெலகாவி, சிக்கோடி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பெலகாவியிலும்; உத்தர கன்னடா, தார்வாட், உடுப்பி - சிக்கமகளூரு வேட்பாளர்களுக்கு ஆதரவாக சிர்ஷியிலும்; தாவணகெரே, ஹாவேரி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தாவணகெரேவிலும்; பல்லாரியிலும் நேற்று ஓட்டு சேகரித்தார்.இந்த கூட்டங்களில், பிரதமர் மோடி பேசியதாவது:நம் மன்னர்களும், பேரரசர்களும் இரக்கமற்றவர்கள் என காங்கிரஸ் இளவரசர் ராகுல் விமர்சித்துள்ளார். ஏழைகளின் சொத்துகளை அவர்கள் பறித்து கொண்டனர் என்றும் தெரிவித்துள்ளார். தேசப்பற்றுக்கும், மிக சிறந்த நிர்வாகத்துக்கும் இன்றும் உதாரணமாக விளங்கும் சத்ரபதி சிவாஜி, ராணி சென்னம்மா போன்றோரை அவமதித்துள்ளார். மைசூரு அரச குடும்பத்தினர் அளித்த பங்களிப்பு குறித்து அவருக்கு தெரியாதா? நம் மன்னர்களையும், பேரரசர்களையும் அவமானப்படுத்தும் ராகுல், நவாப்கள், நிஜாம்கள், சுல்தான்கள், பாட்ஷாக்கள் குறித்து பேச மறுப்பது ஏன்?தன் ஓட்டு வங்கியை திருப்திபடுத்துவதற்காக, காங்கிரஸ் இளவரசர் கவனமாக பேசி உள்ளார். ஆயிரக்கணக்கான கோவில்களை அழித்த முகலாய பேரரசர் அவுரங்கசீப் செய்த மோசமான செயல்களை காங்கிரஸ் மறந்து விட்டது. அதனால் தான் அவுரங்கசீபை புகழும் கட்சிகளுடன் இவர்கள் கூட்டணி அமைக்கின்றனர். நாடு சுதந்திரம் பெற்ற நாளன்றே, 500 ஆண்டுகளாக கட்டாமல் இருந்த ராமர் கோவிலை கட்டுவதற்கு முடிவு செய்திருக்க வேண்டும். ஆனால், அந்த முடிவை எடுப்பதற்கு, இந்த 54 அங்குல மார்பு கொண்டவன் வர வேண்டியதாயிற்று.

எதிர்ப்பு

ராமர் கோவில் கட்டுவது புனிதமான செயல். அந்த புனிதமான செயலை செய்ய ஓட்டு போட்ட நீங்களே புண்ணியவான்கள். ராமர் கோவில் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வழக்கு தொடுத்த முஸ்லிம்களும் பிராண பிரதிஷ்டை விழாவில் பங்கேற்றனர்.ஆனால், கொடூர மனம் கொண்ட காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சியினர் வரவில்லை. பாலராமர் பிரதிஷ்டை விழாவை புறக்கணித்த காங்கிரசாரை, மக்கள் புறக்கணிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Sathyan
மே 01, 2024 09:44

மோடி நாட்டு மக்களுக்காக நிறைய செய்து கொண்டிருக்கிறார் முஸ்லிம்கள் செய்த, செய்துக்கொண்டிருக்குகிறவற்றைத்தான் மோடி சொல்லுகிறார், நம் பாரதத்தில் ஹிந்துக்கள் கோயில் கட்ட, நாட்டையும், கோயில்களையும் சேதப்படுத்திய முஸ்லீம் மதத்தை ஏற்று கொண்ட முஸ்லிம்களை ஏன் கேட்க வேண்டும், இவர்களுக்கு மனசாட்சி என்று ஒன்றும் இல்லை அவர்களுக்கு தெரிந்தது, ஹிந்து அல்லாதவர்களை மிரட்டியோ, லவ் ஜிகாத் செய்தோ, கட்டாயப்படுத்தியோ மதம் மாற்ற வேண்டும், அது தான் முஸ்லிம்களின் குறிக்கோள் ஏன் என்று கேட்டல் குரானில் கூறுவதை செய்கிறோம் என்று மனத்தெளிவு இல்லாமல் பேசுவார்கள்


Vathsan
ஏப் 29, 2024 10:50

இவர் ஆக்கப்பூர்வமான அரசியலை பேசுவதை விட்டுவிட்டு இதே மாதிரியாக மத பிரிவினையை பேசி திரிந்தால் பாஜகவில் உள்ள நியாயமான மக்களின் ஓட்டுக்களை இழக்க நேரிடும் எப்போ பாரு பாக்கிஸ்தான், முகலாயர், காங்கிரஸ் நீங்கள் நாட்டு மக்களுக்கு என்ன செய்வீர்கள் என்பதை சொல்லுங்கள் மோடி நீங்கள் சொன்ன டாலரை ரூபீஸ்க்கு கீழே கொண்டு செல்வது, பெட்ரோல் விலையை பாதியாக குறைப்பது, கோடி வேலை வாய்ப்பு இதெல்லாம் என்ன ஆனது பல வாக்குறுதிகள் பொய்யாய் போனதுதான் மிச்சம் இதே போல் பேசிக்கொண்டு இருங்கள், மக்கள் தங்கள் மூளைச்சலவையிலிருந்து வெளி வரும் நாள் வெகு தூரத்தில் இல்லை


Sathyan
ஏப் 29, 2024 10:33

முஸ்லீம் மதத்தை சேர்ந்தவர்கள் தங்கள் மதத்தில் அக்கிரமம் நடந்ததை என்றைக்கு ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்


Kasimani Baskaran
ஏப் 29, 2024 05:47

சோழர்களையெல்லாம் கூட திராவிடர்கள் மட்டம் தட்டும் பொழுது மொகலாயர்களை காங்கிரஸ் கொண்டாடுவதில் என்ன ஆச்சரியம்


anbu
ஏப் 29, 2024 04:32

மதம்,மாடு முஸ்லிம் ‌மற்றும் மன்னர்கள் பற்றி மட்டும் தொடர்ந்து பேசி வருகிறார் நாட்டின் முன்னேற்றம் பற்றி யோசித்தால் நல்ல இருக்கும் நாங்களும் அயல் நாட்டில் வேலை விட்டு தாய் நாடு திரும்ப வசதியாய் இருக்கும் வடநாட்டு மக்களின் லொள்ளு மற்றும் அட்டகாசம் இங்கேயும் அதிக மாகிடுச்சு அன்பு நியூ ஸிலண்ட்


Venkatesan Srinivasan
ஏப் 29, 2024 14:36

ஏன் இங்கேயும் இந்து கடவுளர்கள், சாதனம், ஜாதி எதிர்ப்பு கேலி கிண்டல் இவற்றை கைவிட்டு பேசலாமே வெளிநாடு சென்று சம்பாதிக்க விரும்புபவர்கள் உள்நாட்டில் வேலை கிடைக்காமல் இல்லை அங்கே அதிக பணம் கிடைக்கிறது இங்கே நீங்கள் புறக்கணித்த வேலையை வடநாட்டவர் எடுத்துக் கொள்கின்றனர் முஸ்லிம் மன்னர்கள் இந்து மக்கள் மீது செய்த அட்டகாசங்கள் எக்காலத்திலும் மாற்றவோ மறக்கவோ மன்னிக்கவோ இயலாது ஜெய் ஹிந்த் ஜெய் பாரத் சத்யமேவ ஜெயதே


மேலும் செய்திகள்









புதிய வீடியோ