உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எங்கள் தொண்டர்களை மட்டும் சிறை பிடிப்பது ஏன்?: பரூக் அப்துல்லா கேள்வி

எங்கள் தொண்டர்களை மட்டும் சிறை பிடிப்பது ஏன்?: பரூக் அப்துல்லா கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்ரீநகர்: 'எங்கள் கட்சி தொண்டர்களை மட்டும் வெளியில் விடாமல் பிடித்து வைத்து இருப்பது ஏன் என பிரதமர் மோடியிடமும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடமும் கேட்க விரும்புகிறேன்' என தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.ஜம்மு காஷ்மீரில் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான பரூக் அப்துல்லா ஓட்டளித்தார். பின்னர் நிருபர்களிடம் பரூக் அப்துல்லா கூறியதாவது: எங்குமே வன்முறை இல்லை, அமைதி நிலவுகிறது என சொல்லிக் கொள்ளும் பா.ஜ., அரசு, எங்கள் கட்சியினரை கடந்த 2 நாட்களாக வீட்டு காவலில் வைத்துள்ளது.

பயம்

எங்கள் கட்சி தொண்டர்களை மட்டும் வெளியில் விடாமல் பிடித்து வைத்து இருப்பது ஏன் என பிரதமர் மோடியிடமும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடமும் கேட்க விரும்புகிறேன். தோல்வி அடைந்துவிடுவோம் என பா.ஜ., பயப்படுகிறது. உண்மையில் அந்தக் கட்சி தோற்கத்தான் போகிறது. தேர்தல் நாள் வந்ததில் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

R Kay
மே 13, 2024 15:58

அயோக்கியர்களைத்தான் சிறை பிடிப்பார்கள் யோக்கியர்களை மட்டுமே வைத்து கட்சி நடத்துங்கள்


Jai
மே 13, 2024 15:54

காங்கிரஸ் திமுக போல் இவர்களும் குடும்ப அரசியல் செய்பவர்கள். இந்த முறை பெரும்பான்மையாக முஸ்லிம் மக்கள் இருக்கும் காஷ்மீர் தொகுதிகளில் பாஜக வெற்றி பெறப்போகிறது. குடும்ப அரசியலில் நடத்தும் இந்த கட்சியையும் மக்கள் தூக்கி எறியத்தான் போகிறார்கள்.


kannan sundaresan
மே 13, 2024 15:29

சிறையில் வைப்பது தவறா


vijay
மே 13, 2024 14:59

அப்போதைய ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கென்று ஒரு நாடு போன்றும் இருந்தது தனியே ஒரு அரசியல் சாசனம், தனியே ஒரு கொடி, தனியே ஒரு பிரதமர், தனியாக சட்டதிட்டங்கள், பாகிஸ்தானில் இருந்து யாரும் வரலாம், குடியேறலாம், என்ன வேணுமின்னாலும் செய்யலாம் ஆனால் அதற்கு எங்கள் இந்திய மக்களின் வரிப்பணத்தை கொட்டிக்கொடுத்தது கடந்தகால மத்திய அரசுக்கள் அந்த கோடிக்கணக்கான பணத்தையும் பல வருடங்களாக குறிப்பிட்ட குடும்பம் உள்ளிட்ட குறுநில குடும்பம் சுருட்டி ராஜபோக வாழ்க்கை வாழ்ந்து வந்தீங்க இந்த லோகத்தில் இதுபோன்ற மட்டமான அரசியலை பார்த்தது இல்லை அது இல்லாமல், பிரிவினைவாதிகளோடும், அண்டை எதிரி நாட்டோடும் கூட்டு சேர்ந்து கும்மி அடிச்சீங்க தனி அரசியல் அமைப்பான மூன்று எழுபது-ஐ நீக்கி உங்களுக்கு ஆப்பு வச்சாச்சு விரைவில் காஷ்மீரின் மீதமுள்ள பிஓகே-யும் மீட்கப்பட்டு இந்தியாவோடு இணைக்கப்படும் அப்போது உனது கூட்டத்தின் கதறல்கள் இனிமையாக ஒலிக்கும்


ஆரூர் ரங்
மே 13, 2024 14:39

அவ்வளவு நல்லவங்க வெயிலில் கஷ்டப்பட வேண்டுமான்னுதான்.


SP
மே 13, 2024 14:25

தவறுதான் உங்களையும் சேர்த்து உள்ளே தள்ளி இருக்க வேண்டும்


Narayanan
மே 13, 2024 14:18

தொண்டர்களை கைது செய்வதில்லை ப்ரூக்ஜி அவர்கள் குண்டர்களாக இருப்பதால் கைது செய்கிறார்கள்


Srinivasan Krishnamoorthi
மே 13, 2024 14:14

தீவிர வாதம் செய்பவர் எந்த கட்சியானாலும் தண்டிக்க பட வேண்டும் தானே


Ramalingam Shanmugam
மே 13, 2024 13:57

நீ பேசியதற்கு உன்னை லாடம் கட்டி இருக்க வேண்டும்


Kumar Kumzi
மே 13, 2024 13:37

பயங்கரவாதிகளை சிறைபிடிக்காமல் கொஞ்சுவார்களா ஹீஹீஹீ


மேலும் செய்திகள்



புதிய வீடியோ