மேலும் செய்திகள்
பேட்டரி சேமிப்பு மையங்களுக்கு அமெரிக்காவில் மக்கள் எதிர்ப்பு
49 minutes ago
மருத்துவமனையில் பரூக் அப்துல்லா அனுமதி
56 minutes ago
பெங்களூரு : வால்மீகி மேம்பாட்டு ஆணைய முறைகேடு வழக்கில், முன்னாள் அமைச்சர் நாகேந்திரா பெயர் சேர்க்காததை கண்டித்தும், முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்யும்படி வலியுறுத்தியும், பெங்களூரில் சட்டசபைக்கு உள்ளேயும், வெளியேயும் எதிர்க்கட்சியினர் தர்ணாவில் ஈடுபட்டனர்.வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் அசோக், சட்டசபையில் ஒத்திவைப்பு தீர்மானத்தின் கீழ் பேசினார். இதற்கு முதல்வர் சித்தராமையா நேற்று மதியம் பதில் அளித்த போது நடந்த விவாதம்:முதல்வர்: தற்கொலை செய்த, கணக்கு கண்காணிப்பாளர் சந்திரசேகர் எழுதி வைத்திருந்த கடிதத்தில், அதிகாரிகள் பத்மநாபன், பரசுராமன் பெயர்கள் மட்டுமே குறிப்பிட்டுள்ளார். எங்குமே முன்னாள் அமைச்சர் நாகேந்திராவின் பெயர் குறிப்பிடவில்லை.பா.ஜ., - அரக ஞானேந்திரா: தற்கொலை செய்து கொண்ட அதிகாரியின் மனைவி கொடுத்த புகாரில், அமைச்சரின் வாய்மொழி உத்தரவால் என்று குறிப்பிட்டும், போலீசார் பதிவு செய்யவில்லை.முதல்வர்: (சபாநாயகரை பார்த்து) அரக ஞானேந்திராவை அமரும்படி சொல்லுங்கள்.(இந்த வேளையில் கோபமடைந்த பா.ஜ.,வினர், ஏற்கனவே எடுத்து வந்திருந்த எதிர்ப்பு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை எடுத்து காண்பித்தனர். பின், சபாநாயகர் இருக்கை முன் சென்று, வழக்கில் நாகேந்திரா பெயரை சேர்க்காததை கண்டித்தும், முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்ய வலியுறுத்தியும், பா.ஜ., - ம.ஜ.த.,வினர் தர்ணாவில் ஈடுபட்டனர்)முதல்வர்: பா.ஜ., - ம.ஜ.த.,வினர் திட்டமிட்டு வந்து போராட்டம் செய்கின்றனர்.இவ்வேளையில், தர்ணா செய்து கொண்டே எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர். சட்டசபையில் இருந்து வெளியே வந்த எதிர்க்கட்சியினர், படிக்கட்டுகள் மீது நின்று கொண்டு, காங்கிரஸ் அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.அதிகாரிகள் செய்த தவறுக்கு, முதல்வர் ஏன் ராஜினாமா செய்ய வேண்டும். முறைகேடுக்கும், முதல்வருக்கும் என்ன சம்பந்தம். பணத்தை வேறு வங்கி கணக்குகளுக்கு முறைகேடாக மாற்றியது வங்கி மேலாளர். இதற்கு, மத்திய நிதித்துறை அமைச்சரை பொறுப்பாளியாக மாற்ற முடியுமா.- சிவகுமார், துணை முதல்வர்
49 minutes ago
56 minutes ago