உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கணவர் கொலை மனைவி கைது

கணவர் கொலை மனைவி கைது

பெலகாவி: குடிகார கணவரை கொன்று விட்டு குழந்தைகளுடன் தப்பியோடிய மனைவியை, போலீசார் கைது செய்தனர்.பெலகாவி நகரின் ராமதீர்த்த நகரில் வசித்தவர் அமித், 34. இவரது மனைவி ஆஷா, 30. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள். அமித் 'டிவி' ரிப்பேர் செய்யும் வேலை செய்தார். சரியாக பணிக்கு செல்வது இல்லை. குடிப்பழக்கத்துக்கு அடிமையான இவர், தினமும் போதையில் வீட்டுக்கு வந்து, மனைவி, குழந்தைகளை சித்ரவதை செய்வார்.ஆஷா, கார்மென்ட்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி, குடும்பத்தை காப்பாற்றினார். ஒரு வாரமாக அமித்தின் தொந்தரவு மிக அதிகமாக இருந்தது.இவரது செயலால் கோபமடைந்த வீட்டு உரிமையாளர், வீட்டை காலி செய்யும்படி கட்டாயப்படுத்தினார்.நேற்று முன் காலை, அளவுக்கு அதிகமாக மது அருந்தி வந்த அமித், மனைவியுடன் தகராறு செய்தார். வீட்டில் இருந்த பொருட்களை வெளியே வீசினார். ஜன்னல் கண்ணாடிகளை உடைத்தார்.பொறுமை இழந்த ஆஷா, கூரான ஆயுதத்தால் கணவரை குத்தி, கொலை செய்துவிட்டு வீட்டை வெளிப்புறமாக பூட்டி கொண்டு இரண்டு குழந்தைகளை அழைத்து கொண்டு தப்பி சென்றார்.இவர்களின் வீட்டில் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து கிடந்ததை கவனித்த அக்கம், பக்கத்தினர் ஜன்னல் வழியாக உள்ளே பார்த்த போது, அமித் கொலையாகி கிடந்தது தெரிந்தது.உடனடியாக மாளமாருதி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த போலீசார், பூட்டை உடைத்து உடலை மீட்டனர். தலைமறைவாக இருந்த ஆஷாவை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

sankaran
பிப் 11, 2025 18:07

கல்யாணம் பண்ணிக்காதீங்கோ... குழந்தைகள் பெத்துக்காதீங்கோ.. வேலை செய்து குடும்பத்தை காப்பாத்துவது மிகவும் கஷ்டம்..


Senthoora
பிப் 11, 2025 05:30

பொறுமைக்கும் எல்லையுண்டு. கணம் நீதிபதி அவர்களே, பிள்ளைகளின் வருங்கால நலத்துக்காக, தாயை Condition முறையில் விடுவியுங்க


Natchimuthu Chithiraisamy
பிப் 12, 2025 12:43

விசாரணை வேண்டாமா ? சொல்லுவது அணைத்து உண்மையா


Rajathi Rajan
பிப் 15, 2025 13:06

ஏன்டா நமது மலரில் வரும் செய்தி பாதி உண்மை, அது தெரியாம நீ என்னமோ வக்கீல் மாதிரி பேசுரம், கண்ணால் படிப்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், அதும் நமது ...சொல்லுவது ம் பொய் , தீர விசாரிப்பதே மெய் ....


சமீபத்திய செய்தி