உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இலங்கையில் அதானிக்கு எதிர்ப்பு காற்றாலை திட்டம் ரத்தாகுமா?

இலங்கையில் அதானிக்கு எதிர்ப்பு காற்றாலை திட்டம் ரத்தாகுமா?

கொழும்பு :''தேர்தலில் வெற்றி பெற்றால், காற்றாலை மின் உற்பத்தி திட்டத்துக்காக அதானி குழுமத்துக்கு அளிக்கப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்வேன்,'' என, இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் ஜனதா விமுக்தி பெரமுனா கட்சி வேட்பாளர் அனுரா குமார திசநாயகே தெரிவித்துள்ளார்.இலங்கை அதிபர் தேர்தல் வரும் 21ல் நடக்கிறது. இதில், தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கே, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா உட்பட 38 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

அச்சுறுத்தல்

இந்த தேர்தலில், ஜே.வி.பி., எனப்படும், மார்க்சிஸ்ட் ஜனதா விமுக்தி பெரமுனா கட்சி தலைவர் அனுரா குமார திசநாயகே வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், செய்தியாளர்களிடம் திசநாயகே நேற்று பேசுகையில், ''இந்தியாவை சேர்ந்த அதானி குழுமத்துக்கு வழங்கப்பட்டுள்ள காற்றாலை மின் உற்பத்திக்கான ஒப்புதல், நம் எரிசக்தி இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக உள்ளது. நாங்கள் தேர்தலில் வெற்றி பெற்றால், அந்த ஒப்புதலை ரத்து செய்வோம்,'' என்றார்.இலங்கையில், காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை செயல்படுத்த அதானி குழுமம் 20 ஆண்டு ஒப்பந்தம் போட்டுள்ளது. இதில், 3,600 கோடி ரூபாயை அந்நிறுவனம் முதலீடு செய்ய உள்ளது. ஒப்பந்தம் வழங்கப்பட்டதில் வெளிப்படைத் தன்மை இல்லை என்றும், இது சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதாக கூறி, திட்டத்துக்கு தடை விதிக்க கோரி அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

பிரேமதாசாவுக்கு ஆதரவு

இதற்கிடையே, தமிழ் கட்சிகளின் பொது வேட்பாளராக, முன்னாள் எம்.பி., பாக்கியசெல்வம் அரியேந்திரனைஆதரிப்பதாக தமிழ் தேசிய கூட்டணி முன்னர் அறிவித்தது.இந்நிலையில், கூட்டணியின் முதன்மை கட்சியான இலங்கை தமிழ் அரசு கட்சி நடத்திய அரசியல் குழுக்கூட்டத்தில், தற்போதைய எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசாவை ஆதரிப்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளதாக மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.ஆனால், கட்சியின் மூத்த தலைவர் அரியேந்திரனை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

ஆரூர் ரங்
செப் 17, 2024 15:39

10 பர்சன்ட் ஓட்டு கூட இல்லாத இலங்கை தகர உண்டியல் குலுக்கி கட்சி குதித்துக் காண்பிக்கிறது. ஆட்ரா ராமா ஆட்ரா ராமா.


Sharma
செப் 17, 2024 16:12

இலங்கை மக்கள் கடந்த கால ஊழல் அரசியலால் படும் கஷ்டங்கள் சொல்லி மாளாது. தயவு செய்து எம் உள்நாட்டு ஊழல் அரசியல், மக்கள் பிரச்சனைகளை புரியாமல் பேசாதீர்கள் . இந்தியாவில் ஒரு வருடத்துக்குள் 1௦௦.75/- க்கு இப்போது உள்ள பெட்ரோல் விலை , கூடி கூடி 3௦௦.௦௦/- என விற்றால் உங்களால் வாங்க முடியுமா? இது ஒரு உதாரணம் மட்டுமே. இங்கே எல்லா விலைவாசியும் 3 அல்லது 3 1/2 மடங்கு ஏறி உள்ளது. 2022 மார்ச் இல் 2.61 ஆக இருந்த இந்திய ரூபா நாணய மாற்று இரண்டே மாதத்தில் 2022 மே இல் 4.68 ஆகியது. ஆதாரம் www.exchange-rates.org இலங்கை வங்குரோத்து ஆகியது. எல்லாமே ஆண்ட அரசில் இருந்த ஊழல் பெருச்சாளிகளின் வேலை. ஊழல் அற்ற ஆ ட் சியை தகர டப்பா உண்டியல் க ட் சி தந்தால் என்ன தங்க டப்பா உண்டியல் க ட் சி தந்தால் என்ன ?


Rajah
செப் 17, 2024 11:20

ராஜபக்ஷே, ரணில் விசக்ரமசிங்ஹயே, சஜித் மற்றும் தமிழ் கட்சிகளை சிங்கள மக்களும் தமிழ் மக்களும் வெறுக்கின்றார்கள். கடந்த காலங்களில் நடந்ததுபோல் தமிழ் சிங்கள ஆட்சியாளர்களின் இனத்துவேஷ பேச்சுக்கள் இனி எடுபடாது. பிரிவினைவாதம் பேசுபவர்கள் மக்களால் புறக்கணிக்கப்படுவார்கள் என்பதற்கு இலங்கை ஒரு நல்ல உதாரணம். ஊழல் இடம்பெற்றிருந்தால் அது திருத்தி அமைக்கப்படும். இங்கு சமூக நீதி, சனாதன எதிர்ப்பு, இந்துமத எதிர்ப்பு, சாதி பற்றியெல்லாம் இடதுசாரி கட்சிகள் பேசுவதில்லை. நடைமுறையில் மக்களுக்கு எது தேவையோ அதைச் செய்வார்கள்.


Sharma
செப் 17, 2024 16:14

நன்றி திரு. ராஜா . சரியாக சொன்னீர்கள்


பாமரன்
செப் 17, 2024 09:56

அதானி கால் வைக்கும் இடமெல்லாம் நிச்சயமாக ஒரு பிராடுத்தனம் இருக்கும்கிறது எல்லாருக்கும் தெரிந்ததுதான்.. தமிழ்நாட்டில் சூரிய மின்சக்தி தொடங்கறதுக்கு அப்போது நாட்டில் யூனிட் கிட்டத்தட்ட மூன்று ரூபாய்க்கு இதே அதானி மற்றும் இதர தயாரிப்பாளர்கள் விற்ற நிலையில் இரும்பு மனுஷி எண்டே அம்மே ஆறரை ரூயாய்க்கு அவசர அவசரமா ஒப்பந்தம் போட்டு எல்லாரும் குய்யோ முயோன்னு கத்தி அவாளுக்கான ஸ்வீட் பாக்ஸ் டெலிவரி ஆனதும் மறந்துடலையா... ஆகவே இதுவும் கடந்து போகும்... ஆனால் எல்லாருக்கும் சுவீட் பாக்ஸ் கிடைக்காது.. இங்கே முக்கி முக்கி சப்போர்ட் பண்றவங்களுக்கான காஷன் இது...


Shekar
செப் 17, 2024 09:32

காற்றாலை சுற்றுசூழலை பதிக்குமாம்.... அரிய கண்டுபிடிப்பு.


Sharma
செப் 17, 2024 08:26

சூரிய ஷக்தி மின்சாரத்துக்கு எதிரானவர் அல்ல. அதானி இலங்கைக்கு 2 டாலருக்கு விற்க்கும் அதே அளவு மின்சாரத்தை இந்தியாவுக்கு 1 டாலருக்கு விற்க போகிறார். அந்த 1 டாலர் யாருக்கு போகிறது என்பதே கேள்வி. அதை புரியாமல் நீங்கள் கம்யூனிஸ்டு அது இது என்று கதை கட்ட வேண்டாம் . திட்டம் இரத்து ஆகாது. உள்ள அற்ற ஒப்பந்தம் மீளமைக்க படும்.


Velan Iyengaar
செப் 17, 2024 08:03

தெய்வப்பிறவி உடனடியாக இலங்கைக்கு ஒரு பயண திட்டம் தயார் செய்துவிடுவார்


Sathyanarayanan Sathyasekaren
செப் 17, 2024 06:29

இந்தியா கம்பனியை எதிர்க்கும் இலங்கை கம்யூனிஸ்ட்களை இந்தியா கம்யூனிஸ்டுகள் கண்டனம் செய்வார்களா? செய்யமாட்டார்கள். இதற்க்கு இங்கே இருக்கும் மதுரை MP வையை திறக்க மாட்டார். திருட்டு திமுகவின் கொள்ளைக்காரர்கள் செய்யும் முதலீட்டை தடுக்காத இலங்கை கம்யூனிஸ்ட்கள் இதனை தடுப்பது ஏன். .


Kasimani Baskaran
செப் 17, 2024 05:32

சீனாவுக்கு ஒப்பந்தம் கொடுத்தால் உடனே பிரச்சினை தீர்ந்து விடும்.


தாமரை மலர்கிறது
செப் 17, 2024 01:41

அதானி காற்றாலை திட்டத்தை ஒப்புக்கொள்வோம் என்று கூறிய இலங்கைக்கு பொருளாதார கஷ்டத்தில் இருக்கும்போது இந்தியா ஒரு பில்லியன் டாலருக்கு மேல் உதவி செய்துள்ளது. அதானி திட்டத்தை கைவிட்டால், உடனடியாக அந்த பணத்தை இந்தியா திரும்ப பெற்று, அந்த பணத்தை அடானிக்கு நஷ்ட ஈடாக கொடுக்க வேண்டும். மேலும் இலவச மின்சாரமும் கொடுத்து வருகிறது. அதையும் ரத்து செய்ய வேண்டும். இலங்கை சீனாவின் பேச்சை கேட்டு ஆட்டம் போட்டால், நடக்கிற கதையே வேறுமாதிரியாக இருக்கும். அதானி திட்டத்தை ஏற்க வேண்டிய கட்டாயம் இலங்கைக்கு உண்டு. இந்திய பிஸிநெஸ்ட்மேன் நட்டமடைய ஒருபோதும் இந்தியா கைவிடாது.


Sharma
செப் 17, 2024 08:30

ஒப்பந்தத்தில் பெரும் ஊழல் நடந்துள்ளது. தயவு செய்து செய்திகளை தேடி பார்க்கவும்.


பாமரன்
செப் 17, 2024 09:49

என்னங்க இப்படி பொத்தாம் பொதுவா இந்திய பிசிநெஸ்ட்மேன் அப்பிடின்னு... அதானி நஷ்டமடைய விடமாட்டோம்னு தெளிவா சொன்னா சிரிப்பு துணுக்கு இன்னும் தரமா இருந்திருக்கும்ல...


சமீபத்திய செய்தி