உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / திறந்த பொது வெளியில் பிரதமர் மோடி பதவியேற்பாரா ?

திறந்த பொது வெளியில் பிரதமர் மோடி பதவியேற்பாரா ?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் மெஜாரிட்டி கிடைத்தால் பதவியேற்பு விழா எவ்வாறு நடத்துவது ? எங்கே நடத்துவது ? என பா.ஜ., உயர்மட்டக்குழு ஆலோசித்து வருகிறது.வரும் ஜுன் 4 ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கவிருக்கிறது. முடிவுகள் பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணிக்கு சாதகமாக வரும் பட்சத்தில் பதவியேற்பு விழா ஏற்பாடுகள் குறித்து பல்வேறு திட்டங்கள் பா.ஜ., கட்சிக்குள் நிலவுகிறது. பதவியேற்பு என்பது வழக்கம் போல் ஜனாதிபதி மாளிகையில் தான் நடக்கும். இந்த முறை இந்த வழக்கத்தை மாற்றி டில்லியில் ஏதனும் திறந்த வெளியில் நடத்த திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதன்மூலம் அதிகம் பேர் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும் என பா.ஜ.,வினர் கருதுகின்றனர். டில்லி கேட் பகுதியான கர்த்வயா (கடமை பாதை ) பகுதியில் நடத்தலாமா அல்லது வேறு இடம் தேர்வு செய்யலாமா என்றும் யோசிக்கப்படுகிறது. கடந்த காலங்களில் நடந்த தேர்தலில் 2014 மே 16 ல் தேர்தல் முடிவுகள் வெளியானது. மே- 26 ல் பதவியேற்பு நடந்தது. இது போல் 2019 மே23 ல் தேர்தல் முடிவுகள் வெளியானது. மே30ல் பிரதமர் மோடியின் பதவியேற்பு விழா நடந்தது.

ஜனாதிபதிகள்

இரண்டுமே ஜனாதிபதி மாளிகையில் தான் நடந்தது . முதன்முதலாக ஜனாதிபதியாக இருந்த காங்கிரசை சேர்ந்த பிரணாப் முகர்ஜி மோடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இரண்டாவது முறை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த முறை திறந்த பொது வெளியில் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெளியே வானவேடிக்கை மற்றும் இசை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படும். ஜனாதிபதி திரவுபதி முர்மு இங்கு வந்து பதவிப்பிரமாணம் செய்து வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Ramanujadasan
மே 30, 2024 16:14

இரண்டாயிரத்து நாற்பத்தி ஏழு வரை மோடி thaan பிரதமர் அல்லது அதிபர் .


Ramanujadasan
மே 30, 2024 16:13

இந்த முறை அமித் shaw துணை பிரதமர் ஆக வாய்ப்பு உண்டு


P. SIV GOWRI
மே 30, 2024 15:46

ARUMAI


Syed ghouse basha
மே 30, 2024 15:44

வாய்ப்பு இல்லை ராஜா எஸிட் போல் ஏற்கனவே எடுத்திருப்பார்கள் உரியவர்களுக்கு தகவல் வந்திருக்கும் மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு


ArGu
மே 30, 2024 16:54

மர்மம் பதறுகிறது


Francis
மே 30, 2024 14:05

மக்கள் உங்களுக்கு அப்படி ஒரு கஷ்டத்தை கொடுக்க மாட்டார்கள். திரு. மல்லிகார்ஜுன் கார்கே பிரதமராக திறந்த வெளி அரங்கில் பதவி ஏற்பார்கள்.


சுராகோ
மே 30, 2024 15:09

கனவு மெய்ப்பட வேண்டும்


Baranitharan
மே 30, 2024 15:55

அப்போ ராவுல் அய்யா இல்லியா? இந்த ஊரு இன்னுமா நம்மள நம்பிகிட்டு இருக்குது? கார்கே மைண்ட் வாய்ஸ்


Ramanujadasan
மே 30, 2024 16:12

தூக்கத்தில் இருந்து எழுங்க . பகல் வேளையிலும் தூங்கிகிட்டு தூக்கிகிட்டு


ArGu
மே 30, 2024 16:55

நாடா அவிழ்கிறது


அசோகன்
மே 30, 2024 13:38

மிகவும் அருமையாக இருக்கும்... மோடிஜி இந்த நூற்றாண்டின் கடவுள் அவதாரம்


P. SIV GOWRI
மே 30, 2024 15:46

ஆமாம்


கனோஜ் ஆங்ரே
மே 30, 2024 18:24

உங்க மாதிரி ஆளுங்களையெல்லாம் திருத்த முடியாதுயா...? மொதல்ல... மாதா,பிதா,குரு,தெய்வம்..என்ற அடிப்படையில், வயசான உங்க பெத்த ஆயி, அப்பனுக்கு வீட்ல மூணு வேளை சோறு போடு... முதியோர் இல்லத்தில் சேர்த்துட்டு, இங்க வந்து கடவுள், அவதாரம்...னு புளுகிட்டிருக்க...?


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை