உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காங்கிரஸ் குழப்பத்தை பற்றி பேசுவாரா சிவகுமார்? பா.ஜ., ஹாவேரி வேட்பாளர் கேள்வி

காங்கிரஸ் குழப்பத்தை பற்றி பேசுவாரா சிவகுமார்? பா.ஜ., ஹாவேரி வேட்பாளர் கேள்வி

ஹாவேரி : “பா.ஜ.,வின் அதிருப்தியாளர்கள் குறித்து பேசும் துணை முதல்வர் சிவகுமார், காங்கிரசில் ஏற்பட்டுள்ள குழப்பத்துக்கு என்ன பதில் சொல்வார்?” என, பா.ஜ., வேட்பாளர் பசவராஜ் பொம்மை கேள்வி எழுப்பினார்.ஹாவேரியில் நேற்று அவர் கூறியதாவது:கோலார் மாவட்டத்தில், காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா செய்ய முன்வந்துள்ளனர். கோலார் காங்கிரசில் பல ஆண்டுகளாக, இரண்டு கோஷ்டிகள் இடையே மோதல் இருக்கிறது. துணை முதல்வர் சிவகுமார், எங்கள் கட்சியின் அதிருப்தி குறித்து விமர்சிக்கிறார். காங்கிரசில் உள்ள உட்பூசல் பற்றி, என்ன சொல்வார்? பாகல்கோட், கோலார், சிக்கபல்லாபூர் உட்பட, பல இடங்களின் காங்கிரசில் கோஷ்டி பூசல் உள்ளது. எங்கள் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் சிவராம் ஹெப்பார், சோமசேகர் ஆகியோர் கட்சியை விட்டுச் செல்வது குறித்து, அவர்களிடமே கேளுங்கள். காங்கிரசின் ஹெச்.கே.பாட்டீல், எங்களுக்கு மூத்தவர். தேர்தலின்போது, தனிப்பட்ட விஷயங்களை பற்றிப் பேசுகிறார். விரக்தியில் இதுபோன்று பேசுகிறார். அவர் இந்த வயதிலும், அமைச்சராக பதவி வகிக்கிறார். நான் எம்.பி.,யாக பணியாற்றுவதில் அவருக்கு என்ன பிரச்னை? அவரை கலாசாரம் தெரிந்த அமைச்சர் என, நினைத்திருந்தேன்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ