உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காத்திருக்கும் நடுத்தர வர்க்கம்: மத்திய பட்ஜெட்டில் நிறைவேறுமா எதிர்பார்ப்பு?

காத்திருக்கும் நடுத்தர வர்க்கம்: மத்திய பட்ஜெட்டில் நிறைவேறுமா எதிர்பார்ப்பு?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கடந்த 10 ஆண்டுகளாக, ஒவ்வொரு மத்திய பட்ஜெட் தாக்கலின்போதும், தங்களுக்கு ஏதாவது சலுகைகள் கிடைக்காதா என, காத்துக்கிடக்கிறது நடுத்தர வர்க்கம்.'மத்திய அரசால், நடுத்தர வர்க்கத்தினருக்கு, குறிப்பாக மாதச் சம்பளதாரர்களுக்கு பயன் இல்லை. மாறாக வரிச்சுமைதான் அதிகரித்திருக்கிறது' என்ற கருத்து அதிகரித்து வருகிறது. நடுத்தர மக்களை மத்திய அரசு தொடர்ந்து வஞ்சித்து வருவதாக, எதிர்க்கட்சிகளும் குற்றம்சாட்டி வருகின்றன. மத்திய அரசு மீதான நடுத்தர வர்க்கத்தினரின் குற்றச்சாட்டுகளில் வருமான வரி உச்சவரம்பு, வரிச்சலுகை, வீட்டுக்கடன் மீதான சலுகை ஆகியவற்றில், பணவீக்கத்துக்கு ஏற்ப மாற்றம் செய்யாதது முக்கிய இடம் பிடிக்கின்றன.வருமான வரி உச்சவரம்பு 2014ல், ரூ. 2.5 லட்சம். 10 ஆண்டுகளாக இதில் மாற்றம் செய்யப்படவே இல்லை. 2001ல் வருமான வரி உச்சவரம்பு ரூ.1.25 லட்சம். இது அன்றைய மதிப்பில் 145 கிராம் தங்கம். தற்போது ரூ.2.5 லட்சம்; 35 கிராம் தங்கத்தைத்தான் வாங்க முடியும்.

பண வீக்கம் 46 சதவீதம்

கடந்த, 2014ல் இருந்து பண வீக்கம் 46 சதவீதம் வரை உயர்ந்திருக்கிறது. பண வீக்கத்துக்கு ஏற்றாற்போல், வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் செய்யாதது மத்திய வர்க்கத்தினரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.2020ல் வருமான வரி உச்சவரம்பு (புதிய முறைப்படி) ரூ.7 லட்சமாக மாற்றப்பட்டிருந்தாலும், பெரும்பாலான சலுகைகள், விலக்குகள் நீக்கப்பட்டுள்ளன. ஆனால், பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான இட ஒதுக்கீட்டுக்கான வரம்பு ரூ. 8 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.2014ல், பி.பி.எப்., - என்.எஸ்.சி., ஆயுள் காப்பீடு உள்ளிட்ட முதலீடுகளுக்கு, பிரிவு 80 சியின் கீழ், ரூ.1.5 லட்சம் வரை விலக்கு; பிரிவு '80 டி' பிரிவில், ரூ. 25,000 வரை விலக்கு இருந்தது. இந்த இரண்டும் தற்போது வரை உயர்த்தப்படவில்லை. நடுத்தரவர்க்கத்தினரின் சேமிக்கும் மனப்பாங்கை அரசு ஊக்குவிப்பதாக இல்லை. இது, மத்திய அரசின் மீதான கோபமாக மாறியிருக்கிறது.

வீட்டுக் கடன்

வீட்டுக் கடன் மீதான வருமான வரிச் சலுகையைப் பொறுத்தவரை 2014ல், '80 சி' பிரிவில் ரூ. 1.5 லட்சம்வரை விலக்கு. பிரிவு 24ல், ரூ. 2 லட்சம் வரை விலக்கு இருந்தது. இதிலும் எவ்வித மாற்றமும் இல்லை. 10 ஆண்டுகளுக்கு முன், வீடு, மனைகளின் விலை. கட்டுமானப் பொருட்களின் விலை ஆகியவற்றை தற்போதைய நிலவரத்துடன் ஒப்பிட்டால், எவ்வளவு உயர்த்தப்பட்டிருக்க வேண்டும்?இதுதவிர, சிறு 'ஈகுவிட்டி' முதலீட்டாளர்களுக்கான நீண்டகால மூலதன ஆதாய வரிச்சலுகை நீக்கம், ஈகுவிட்டி வைத்திருப்போருக்கு டிவிடண்டுகளுக்கு வரி, பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வு, டோல் கேட் கட்டணங்கள் என, மத்திய வர்க்கத்தினரை நேரடியாக பாதிக்கும் பல்வேறு வரிகளும் கட்டண உயர்வுகளும் நடுத்தர வர்க்கத்தினரை கொந்தளிப்பான மனநிலையில் வைத்திருக்கின்றன. இவற்றை கவனத்தில் கொண்டு வரும் பட்ஜெட்டில் மத்திய அரசு தீர்வு தர வேண்டும் என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

ஆடிட்டர் கார்த்திகேயன்

இக்குற்றச்சாட்டுகள் குறித்து ஆடிட்டர் கார்த்திகேயனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:நடுத்தர வர்க்கத்தினருக்கு மத்திய அரசு கடந்த 10 ஆண்டுகளாக எதுவுமே செய்யவில்லை என, கூறிவிட முடியாது. வருமான வரியைப் பொறுத்தவரை குறைந்த வருவாய் பிரிவினருக்கு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. உதாரணமாக ரூ.7 லட்சம் வரை வரி இல்லை. தற்போது பழைய மற்றும் புதிய என இரு வரி முறைகள் (ரெஜிம்) உள்ளன. புதிய வரி முறையில், ரூ. 15 லட்சத்துக்கும் மேல்தான் 30 சதவீதம் வரி. ஆனால், பழைய முறையில் ரூ.10 லட்சத்துக்கும் மேல் சென்றாலே 30 சதவீதம் வரி இருந்தது.முதலீடுகளை ஊக்கப்படுத்தும் சலுகைகள் இல்லை என்பது உண்மைதான். பழைய முறையில், முதலீடுகளுக்காக 80 சி, 80 டி, பி.பி.எப்., என்.எஸ்.சி., நன்கொடை போன்றவற்றுக்கு ரூ.1.5 லட்சம் வரை விலக்கு உள்ளது. பணவீக்கத்துக்கு ஏற்ப இது நீண்ட காலமாக மாற்றப்படவில்லை என்பது பெரும் குறை. முதலீடுகளை ஊக்குவிக்கும் சலுகைகள் இல்லாவிட்டால், சேமிக்கும் பழக்கம் குறையும். அரசின் போக்கு, நம்மை சேமிப்புக் கலாச்சாரத்தில் இருந்து செலவு அல்லது நுகர்வுக் கலாச்சாரத்துக்கு மாற்றுவதாக உள்ளது. ஆசியா, சேமிப்புக் கலாச்சாரத்தைச் சேர்ந்தது. அமெரிக்கா போன்ற நாடுகளே, நுகர்வுக் கலாசாரத்தில் இருந்து சேமிக்கும் கலாசாரத்தை நோக்கி சென்று கொண்டுள்ளன.பெரும்பாலான நாடுகள், பணவீக்கத்துக்கு ஏற்ப ஆண்டுதோறும் வருவானவரி உச்சவரம்பை அதிகரித்துள்ளன. அவ்வாறு செய்தால், பெரும்பாலானவர்கள் வருமானவரி வலையில் இருந்து விலகிச் சென்றுவிடுவார்கள் என்ற ஐயப்பாட்டில், நமது அரசு உச்சவரம்பை அதிகரிக்காமல் இருப்பது சரியான அணுகுமுறை அல்ல. இதனால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். குறிப்பாக, நடுத்தர வர்க்கத்தினர். எனவே, வரும் பட்ஜெட்டில் இதை அரசு சரி செய்யும் என நம்புகிறேன். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

சமூக வலைதளங்களில் கொந்தளிப்பு

சமூக வலைதளங்களில் தீவிரமாக இயங்குபவர்களில் பெரும்பாலானவர்கள் நடுத்தர வர்க்கத்தினர். மத்திய பா.ஜ., அரசு 10 ஆண்டுகளாக தங்களை வஞ்சித்து வருவதாக இவர்கள் தொடர்ந்து குரல் எழுப்பி வருவதால், இது ஒட்டு மொத்த நடுத்தர மக்களின் குரலாக எதிரொலிக்கத் தொடங்கியிருக்கிறது.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 84 )

g. Tharanipathi
ஜூலை 22, 2024 16:11

இந்தியாவின் சாபக்கேடு. இந்திய சரித்திரத்தில் இதுபோன்ற நிதி அமைச்சர் யாரும் இருந்ததில்லை


VIDHURAN
ஜூலை 21, 2024 17:29

சேமிப்புக்கு முதலீட்டுக்கு வரி விதிப்பு என்பது வசதியானவர்களுக்கான சலுகைகள் தான். தன்னால் சேமிக்க முடியாத அளவிற்கு பொருளாதார நிலையில் உள்ள ஒருவரிடம் வரியை கட்டாயமாக்கி அதை சேமிக்கும் நிலையில் இருக்கும் மாற்றொருவருக்கு வரிவிலக்கு அல்லது வரி சலுகை என்பது ஏற்க முடியாத ஒன்று.


Mani . V
ஜூலை 21, 2024 06:21

வாய்ப்பில்லை ராஜா, வாய்ப்பில்லை.


Naga Subramanian
ஜூலை 21, 2024 06:15

1 பாரதத்தின் பெயர் உலக அரங்கில் புகழின் உச்சியில் உள்ளது என்பதில் மாற்று கருத்துக்கு இடமில்லை. கடந்த பத்து வருடங்களில் நடுவண் அரசு, எந்த கொள்ளையும் அடிக்கவில்லை என்பதும் உண்மை. 2 மாநில குன்றிய அரசுகளைச் சேர்ந்த பல அமைச்சர்கள், பல லட்சம் கோடிகளை தகாத வழியில் ஈட்டி, எந்தவித தண்டனையும் அடையாமல் கோலோச்சி வருகின்றனர் என்பதும் நிதர்சனம். 3 ஆனால் வருமானவரி கட்டும் நடுநிலை மக்கள் மட்டும் கிட்டத்தட்ட 65 சதவீதம் கட்டி வருமானம் + பொருட்கள் வரி எல்லாம் சேர்த்து, எந்தவித சேமிப்பும் இல்லாமல் துயரத்தில் உள்ளனர். இதற்கு விடிவுகாலம் பிறந்தால் நலம் ஆட்சியை தக்க வைக்க சந்திரபாபுவுக்கும், நிதீஷுக்கும் செவி சாய்க்கும் நடுவண் அரசு, சாதாரண மக்களுக்கும் உதவிடுமா?


நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
ஜூலை 20, 2024 19:32

முடிந்தவரையில் நடுத்தர மக்களை கொள்ளையடிப்போம்.


Naga Subramanian
ஜூலை 21, 2024 06:24

தங்களுக்கு 200 கொடுத்து மகிழ்விக்கும் மாநில அரசை சேர்ந்த அமைச்சர்கள் எத்தனை பேர், எவ்வளவு கொள்ளை அடிக்கின்றனர் மற்றும் அடித்தனர் என்பது யாவரும் அறிந்ததே. இந்த கொள்ளையை தவிர்த்து, நாட்டு நலனில் சேர்த்திருந்தால், விலைவாசி ஏற்றம் என்பது எப்பொழுதோ தவிர்க்கப்பட்டிருக்கும். ஆகையால் தங்களது நெற்றிக் கண்ணை தங்களுக்கு 200 அளித்து மகிழ்விக்கும் அரசு மேல் விழுந்து, அது செய்யும் பெரும் பாதகமான ஊழலை எரிக்கட்டும் முதலில்.


Raja
ஜூலை 20, 2024 17:05

உண்மை தான் நடுத்தர மக்களை மோடி அரசு வஞ்சித்து கொண்டுள்ளது, மற்றபடி வரி வசூலை நாட்டின் வளர்ச்சி திட்டங்களுக்கு ஊழல் செய்யாமல் செய்து கொண்டுள்ளது, மன்மோகன் கொடுத்த சலுகை விலை பெட்ரோலுக்கு வாங்கிய கடன்கள் சுமார் ஒன்றரை லட்சம் கோடியை மோடி அரசு அடைத்துள்ளது. இதெல்லாம் அரசு நிதி சுமையின்றி நடக்க உதவுகிறது, நடுத்தர மக்களும் நிதி சுமையின்றி கள்ள மோடி அரசு இந்த முறை எதாவது செய்தாக வேண்டும், இல்லை எனில் வீட்டுக்கு அனுப்பப்படுவர்.


Karunakaran
ஜூலை 22, 2024 15:47

ஐயா பெட்ரோல் கடனை அடைத்து பல வருடங்கள் ஆகிவிட்டன. மம்மோகன் அரசு குறைந்த விலையில் பெட்ரோல் கொடுத்ததால் நம்நாட்டில் விலைவாசி குறைவாக இருந்தது நடுத்தர மக்கள் சந்தோஷமாக வாழ்ந்தார்கல். ஆனால் கடந்த பத்துஆண்டுகளில் தொழிலதிபர்களுக்கு கடன் தள்ளுபடி செய்ததுதான் மிக மிக அதிகம். இதனால் பலன் அடைந்தவர்கள் பெரும்தொழில் அதிபர்கள் மட்டுமே. நம்மை போன்ற நடுத்தர மக்கள் அதிக விலைக்கு பெட்ரோல் போட்டே வருமானம் காலியாகி விடுகிறது. இதை எல்லாம் யார் கேட்பது.


Velan
ஜூலை 20, 2024 14:35

நடுத்தர வர்க்கத்திற்கு நாமம்


R SRINIVASAN
ஜூலை 20, 2024 13:37

காங்கிரசின் 60 ஆண்டு கால மோசமான ஆட்சியின் அவலட்சணத்தை சரி செய்வதற்கே 5 ஆண்டுகள் ஓடிவிட்டன. 1966-ல் நகர்வாலா கேசில் இந்திராகாந்தி 60 lacs கொள்ளையடித்தார் .


சேவியர், கோயம்புத்தூர்
ஜூலை 20, 2024 12:52

இந்த நாட்டில் எட்டு சதவீத மக்கள் மட்டுமே வருமானத்தை பதிவு செய்கிறார்கள். ஒரு சதவீதம் பேர் வருமானம் இல்லை என ஜீரோ ரிட்டர்ன் பைல் செய்கிறார்கள். 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள், முதியோர்கள், விவசாயிகள், வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் இவர்களே மொத்த மக்கள் தொகையில் 75 சதவீதம் வந்துவிடுவார்கள். மீதி உள்ளவர்களில் பதினைந்து சதவீதம் பேர்தான் வருமான வரி கட்ட தகுதியானவர்கள். ஆனால், இதில், ஏழு சதவீதம் பேர் தான் வரி கட்டுகிறார்கள். இவர்களையும் 3 பிரிவுகளாக பிரிக்கலாம். 1. மாத சம்பளம் வாங்குவோர் 2. கார்ப்பரேட் நிறுவனங்கள் 3. பதிவு செய்த பிரைவேட் லிமிடெட் கம்பெனியில் மற்றும் உற்பத்தி தொழிலில் ஈடுபட்ட நிறுவனங்கள். நாட்டில் இருபது லட்சம் சொத்து உள்ளது என இந்தியாவில் கணக்கு காட்டியவர்கள் வெறும் 40 ஆயிரம் மட்டுமே. (நம்புங்கள் ஸ்டாலினுக்கு சொந்தமாக கார், வீடு இல்லை என்று அவரே வேட்பு மனு தாக்கலின் போது கணக்கு காட்டி உள்ளார்). உதயநிதி தாக்கல் செய்த சொத்து விபரங்களை எடுத்துப் பாருங்கள் அதுவும் இப்படித்தான் இருக்கும். அனைத்து அரசியல்வாதிகளும் இப்படித்தான் சொத்து கணக்கு காட்டுகிறார்கள். இங்கு கருத்து சொன்னவர்கள் ஒன்றை மறந்து விடுகிறார்கள். நமது நாட்டில் வேலை கொடுப்பது அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் தான். மறைமுக வரி மற்றும் ஜிஎஸ்டி- ஐ எடுத்துக் கொண்டால், ஆண்டுக்கு 40 லட்சம் ரூபாய் வரை டர்ன் ஓவர் செய்பவர்கள் ஜிஎஸ்டி கட்ட வேண்டியது இல்லை. அதாவது மாதம் மூன்று புள்ளி ஐந்து லட்சம் வரை விற்பனை செய்பவர்கள் அல்லது ஒரு நாளைக்கு பனிரெண்டாயிரம் வரை விற்பனை செய்பவர்கள் ஜிஎஸ்டி கட்ட வேண்டியது இல்லை. உங்கள் மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள். நம்மூரில் உள்ள பிரியாணி கடைகள், புரோட்டா கடைகள், பேக்கரிகள், ஸ்வீட் கடைகள், சிறு நகைக் கடைகள், பலசரக்கு கடைகள் வைத்திருப்பவர்கள் வியாபாரம் செய்யாமலா இருக்கிறார்கள். இவர்கள் யாரும் ஐ டி அல்லது ஜிஎஸ்டி கட்டுவது இல்லை. பல கடைக்காரர்கள் ஜி எஸ் டி கட்டாமல் வெறும் வெள்ளை பேப்பரில் எஸ்டிமேட் என்று எழுதி தருகிறார்கள். சிமெண்ட் விற்பவர்கள், ஹார்டுவேர் கடைக்காரர்கள், எலக்ட்ரிக்கல் பொருள் விற்பவர்கள் பலர் இப்படித்தான் செய்கிறார்கள். இங்கு யோக்கியன் போலவும், ஏழைகளுக்காக பரிதாபப்படுவது போலவும் கருத்து பதிவிடுவோர்கள் ஜி எஸ் டி கட்டாத பொருட்களை வாங்க மாட்டேன் என்று உறுதிமொழி எடுப்பார்களா?


சுப்பிரமணியன் மதுரை
ஜூலை 20, 2024 13:13

சேவியர் சொன்னது ரொம்ப ரொம்ப சரி. நமது நாட்டில் வரி கட்டாமலேயே யோக்கியன் போல பேசுபவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். காங்கிரஸ் முதல் பாரதிய ஜனதா வரை எல்லோரையும் உள்ளே கொண்டு வர யாரும் யோசிப்பது இல்லை. ஏற்கனவே வரி கட்டுவோரை கூட கட்ட வைக்க அவருக்கு நோட்டீஸ் அனுப்புகிறார்கள். ரிமைண்டர் அனுப்புகிறார்கள். கடந்த ஆண்டை விட கம்மியாக கட்டியிருந்தால் விளக்கம் கேட்கிறார்கள். வரியே கட்டாத கோடிக்கணக்கான ஏமாற்று பேர்வழிகள் சவுகரியமாக வலம் வந்து கொண்டு இருக்கின்றனர். வெறும் 30 ஆயிரம் சம்பளத்துக்கு ஒத்த ரூமில் நான்கு பேர் வாழ்க்கை நடத்தும் நகரவாசிகள் மட்டும் கஷ்டப்படுவது இந்த யோக்கியர்களுக்கு தெரியாது.


வைகுண்டேஸ்வரன்
ஜூலை 20, 2024 14:28

என் வீட்டில் ஒரு மின் விசிறி வைக்க நான் ஏன் ரூ.135 9% of 1500 மத்திய அமைச்சர்களின் ஆடம்பரத்துக்கு கொடுக்க வேண்டும்?


Ray
ஜூலை 30, 2024 06:36

முடி வெட்டிக் கொள்ள 18 % GST உண்டு 300 + 54 வரி


R VENKATARAMANAN
ஜூலை 20, 2024 12:44

Exemption for senior citizens especially nonpensioners, who are not involved in any trading activities, depending solely upon interest income from deposits in banks, deduction of TDS may be considered since several nonpensioners suffer to meet their day-to-day needs, There are several in rental portions only.


மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி