உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வருங்கால கணவருடன் சேர்ந்து தாயைக் கொன்ற பெண் கைது

வருங்கால கணவருடன் சேர்ந்து தாயைக் கொன்ற பெண் கைது

புதுடில்லி:தாயைக் கொலை செய்த வழக்கில் இளம்பெண், அவரது வருங்கால கணவர் மற்றும் நண்பர் ஆகிய மூவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.தென்மேற்கு டில்லி நஜப்கரை சேர்ந்தவர் சுமித்ரா,58. நேற்று அதிகாலை கொலை செய்யப்பட்டார். தகவல் அறிந்து அந்த போலீசார் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர்.மேலும், அந்தப் பகுதியில் இருந்த கண்காணிப்புக் கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். ஒரு பெண் மற்றும் இரண்டு ஆண்கள் அதிகாலை 2:18 மணிக்கு வந்து சென்றது தெரிய வந்தது.அந்தக் காட்சிகளில் இந்த நபர்கள் குறித்து விசாரித்தனர்.சுமித்ராவின் மகள் மோனிகா. நரேலாவில் வசிக்கும் அவரது வருங்கால கணவர் நவீன் குமார் மற்றும் இருவருக்கும் நண்பரான ஹரியானா மாநிலம் சோனிபட்டைச் சேர்ந்த யோகி ஆகியோர் என்பது தெரிந்தது.'மூவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். நஜாப்கர் மெயின் மார்க்கெட் அருகே அடுக்குமாடி குடியிருப்பின் நான்காவது மாடியில் 58 வயதான தனியாக வசித்த தன் தாயுடன் சொத்து தகராறு இருந்ததை மோனிகா ஒப்புக் கொண்டார். மூவரிடமும் கிடுக்கிப் பிடி விசாரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ