உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 95 முறை மாமியாரை மாறி மாறி குத்தி கொன்ற மருமகளுக்கு மரண தண்டனை

95 முறை மாமியாரை மாறி மாறி குத்தி கொன்ற மருமகளுக்கு மரண தண்டனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

போபால்: தனது 50 வயது மாமியாரை 95 முறைக்கு மேல் கத்தியால் குத்தி கொலை செய்த, 24 வயது பெண்ணுக்கு மத்தியப் பிரதேசத்தின் ரேவா மாவட்டத்தில் உள்ள நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.மத்திய பிரதேசத்தில் உள்ள ரேவாவில் வசித்து வந்தவர் சரோஜ். இவருக்கும் இவரது மருமகளுக்கும் அடிக்கடி சண்டை நடந்து வந்தது. 2022ம் ஆண்டு ஜூலை 12ம் தேதி மீண்டும் இவர்களுக்குள் சண்டை நடந்துள்ளது. அன்று வீட்டில் மாமியார் மட்டும் இருந்துள்ளார். இதனால் மருமகள் மாமியாரை வீட்டில் இருந்த கத்தியால் மாறி மாறி 95 முறை குத்திக் கொலை செய்தார். இது குறித்து சரோஜின் மகன் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். மருமகள் கைது செய்யப்பட்டார். ரேவா மாவட்டத்தில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இரண்டு வருடங்களாக விசாரணை நடந்து வந்தது. மாமியாரை 95 முறை குத்தி கொலை செய்த, மருமகளுக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. மருமகள் பெயர் வெளியிடப்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Kanns
ஜூன் 13, 2024 22:31

Simply Publicly Encounter PostTrial Punishment Such Dreaded Women Criminals


rama adhavan
ஜூன் 12, 2024 20:30

மேல் முறையிட்டில் தண்டனை குறைய வாய்ப்பு உண்டு. ஆமாம் இந்த பெண்ணை கொடுமை படுத்திய கணவனுக்கும் அவன் குடும்பத்துக்கும் என்ன தண்டனை?


Tiruchanur
ஜூன் 12, 2024 17:53

அந்த மருமக நிறைய தமிழ் டிவி சீரியல் பார்த்திருப்பா போல


என்றும் இந்தியன்
ஜூன் 12, 2024 17:31

94 முறை குத்தியிருந்தால் ஆயுள் தண்டனை 93 முறை குத்தியிருந்தால் வெறும் 1 வருட தண்டனை 92 முறை குத்தியிருந்தால் சில நாட்கள் தண்டனை என்ன சரிதானே


மேலும் செய்திகள்